Home /News /national /

குறுகிய காலத்தில் 100 கோடி கொரோனா தடுப்பூசி... சாத்தியமானது எப்படி?

குறுகிய காலத்தில் 100 கோடி கொரோனா தடுப்பூசி... சாத்தியமானது எப்படி?

நரேந்திர மோடி

நரேந்திர மோடி

இந்தியாவிற்கு என சொந்தமாக தடுப்பூசி இல்லையென்றால் என்ன ஆகியிருக்கும் என்று நினைத்து பாருங்கள்?இவ்வளவு பெரிய மக்களுக்கு போதுமான தடுப்பூசிகளை இந்தியா எப்படி பெற்றிருக்கும்? இதற்கு எத்தனை ஆண்டுகள் எடுத்திருக்கும்? 

  இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 100 கோடியை கடந்துள்ளது.  இதற்கு முக்கிய காரணம் இந்திய தடுப்பூசி மீது மக்கள் வைத்த நம்பிக்கைதான் என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

  பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய பிளாக்கில் (Blog) இது தொடர்பாக வெளியிட்டுள்ள குறிப்பில், “ தடுப்பூசி செலுத்த தொடங்கிய 9 மாதங்களில் இந்தியா 100 கோடி தடுப்பூசியை செலுத்தியுள்ளது.  உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கம் காரணமாக இந்தியா வலுவாக உருவெடுத்துள்ளது.

  இது சமூகத்தின் பல பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு தீவிரமான பகீரத முயற்சியாகும்.  அவநம்பிக்கை மற்றும் பீதியை உருவாக்க  பல்வேறு முயற்சிகள் நடைபெற்றப்போதிலும் அதை தாண்டி தடுப்பூசி மீது மக்கள் வைத்த நம்பிக்கையும் இந்த வெற்றிக்கு ஒரு காரணம். ஒருசிலர் வெளிநாட்டு தயாரிப்புகளை மட்டுமே நம்புவார்கள். ஆனால்,  கொரோனா தடுப்பூசி போன்ற முக்கியமான கட்டத்தில், இந்திய தயாரிப்பு  (Made in India) தடுப்பூசிகளை மக்கள் ஒரு மனதாக நம்பினர். இது குறிப்பிடத்தகுந்த மாற்றமாகும்.

  மக்களும் அரசாங்கமும் ஒரு பொதுவான குறிக்கோளுடன் ஒன்றிணைந்தால் இந்தியாவால்  என்ன சாதிக்க முடியும் என்பதற்கு இந்தியாவின் தடுப்பூசி இயக்கம் ஒரு எடுத்துக்காட்டு. 130 கோடி மக்கள் தொகை உள்ளதால் தொடக்கத்தில் பலர் சந்தேகப்பட்டனர். சிலர் தடுப்பூசி முழுமையாக செலுத்த இந்தியாவுக்கு 3-4 ஆண்டுகள் ஆகும் என்று கூறினர். மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வமுடன் முன் வருவார்களா என்றும் சிலர் சந்தேகம் எழுப்பினர்.

  இதையும் படிங்க: விளக்கேற்றி, ஒலி எழுப்பினால் கொரோனா ஒழிந்திடுமா என்றார்கள், ஆனால்.. பிரதமர் மோடி உரை


  தவறான நிர்வாக மேலாண்மை மற்றும் குழப்பம் ஏற்படும் என்று கூறியவர்களும் உண்டு. மற்றவர்கள், தடுப்பூசியை விநியோகிக்க முடியுமான என இந்தியாவின் நிர்வாக திறனை சந்தேகித்தனர். ஆனால் 2020 தேசிய பொது முடக்கம் போன்று, நம்பினால் அதன் முடிவு எவ்வாறு இருக்கும் என்பதை மக்கள் காட்டினர்.

  ஒவ்வொருவரும் உரிமையை எடுத்துக் கொள்ளும்போது, எதுவும் சாத்தியமில்லை. தடுப்பூசியில் தங்களுக்கு முன்னுரிமை சிகிச்சை அளிக்க பல்வேறு தரப்பினரிடம் இருந்தும்  நிறைய அழுத்தம் இருந்தது. ஆனால் தடுப்பூசி இயக்கத்தில் விஐபி கலாச்சாரம் இல்லை என்பதை இந்திய அரசு உறுதி செய்தது. தடுப்பூசியின் உதவியுடன் மட்டுமே கொரோனா பெருந்தொற்றை எதிர்த்து போராட முடியும் என்பது 2020ன் தொடக்கத்தில் தெளிவானது.

  மேலும் படிக்க: புக்கிங் ஓபன் செய்த 20 நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்த MG Astor கார்கள்!


  இதனால், நாம் முன்கூட்டியே தயார் ஆக தொடங்கினோம். நிபுணர் குழுக்களை உருவாக்கி ஏப்ரல் 2020 முதல் வரைபடத்தை தயாரிக்க தொடங்கினோம். இன்றுவரை, ஒருசில நாடுகள் மட்டுமே தங்களுக்கான தடுப்பூசியை தயாரித்துள்ளன.  180க்கும் மேற்பட்ட் நாடுகள் உற்பத்தியாளர்களின் மிகக் குறைந்த தொகுப்பை சார்ந்துள்ளன. மேலும், சில நாடுகள் தடுப்பூசிக்காக காத்திருக்கின்றன.

  இந்தியாவிற்கு என சொந்தமாக தடுப்பூசி இல்லையென்றால் என்ன ஆகியிருக்கும் என்று நினைத்து பாருங்கள்?இவ்வளவு பெரிய மக்களுக்கு போதுமான தடுப்பூசிகளை இந்தியா எப்படி பெற்றிருக்கும்? இதற்கு எத்தனை ஆண்டுகள் எடுத்திருக்கும்? இந்திய விஞ்ஞானிகள் மற்றும் தொழில்முனைவோருக்கு தான் இந்த புகழ் சேர வேண்டும்.


  அவர்களின் திறமை மற்றும் கடின உழைப்பின் காரணமாகவே தடுப்பூசிகளைப் பொறுத்தவரை உண்மையிலேயே இந்தியா ஆத்மநிர்பர் ஆகும். நமது தடுப்பூசி உற்பத்தியாளர்கள், இவ்வளவு பெரிய மக்கள்தொகையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதன் மூலம், அவர்கள் யாரையும் விட சளைத்தவர்கள் இல்லை என்பதை காட்டியுள்ளனர். முதல் நாளில் இருந்தே தடுப்பூசி தயாரிப்பாளர்களிடம் கைக்கோர்த்து இந்திய அரசு பணியாற்ற தொடங்கியது.  அவர்களுக்கான உதவிகளை வழங்கியது.

     இந்தியா போன்ற மக்கள் தொகை கொண்ட நாட்டில் தடுப்பூசி தயாரிப்பது மட்டும் போதுமானது அல்ல.  அனைவருக்கும் அது கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.  இதில் உள்ள சவால்களை புரிந்துகொள்ள ஒரு தடுப்பூசி குப்பியை பயணத்தை எண்ணிப் பாருங்கள், புனே அல்லது ஐதராபாத்தில் உள்ள ஒரு ஆலையில் இருந்து, எந்த மாநிலத்திலும் உள்ள ஒரு மையத்திற்கு குப்பி அனுப்பி வைக்கப்படும்.


  அங்கிருந்து மாவட்ட மையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்து, அது ஒரு தடுப்பூசி மையத்தை அடைகிறது. இந்த முழு பயணத்தின்போதும் அவ்வப்போது அதன் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுகிறது. தடுப்பூசி விநியோகம் தொடர்பாக மாநிலங்களுக்கு முன்பே தகவல் அளிக்கப்படும். அதற்கு ஏற்க அவை தயாராக இருக்கும்.  சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இதுவரை இல்லாத முயற்சி இதுவாகும்.


  இந்த முயற்சிகள் அனைத்தும் கோவின் ( CoWIN)  என்னும் ஒரு வலுவான தொழில்நுட்ப தளத்தால் பூர்த்தி செய்யப்பட்டன.  தடுப்பூசி இயக்கம் சமமானது, அளவிடக்கூடியது, கண்காணிக்கக்கூடியது மற்றும் வெளிப்படையானது என்பதை  கோவின் உறுதி செய்தது. இது விருப்பத்திற்கு அல்லது வரிசையில் குதிப்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லை என்பதை உறுதி செய்தது.


  நமது  தடுப்பூசி இயக்கம்  'டீம் இந்தியா'வின் வலிமையை மீண்டும்  காட்டியது. தடுப்பூசி போடுவதில் இந்தியாவின் வெற்றி, 'ஜனநாயகம் வழங்க முடியும்' என்பதை உலகம் முழுவதும் நிரூபித்துள்ளது” என்று கூறியுள்ளார்.   
  Published by:Murugesh M
  First published:

  Tags: Corona Vaccine, Covid-19 vaccine, Prime Minister Narendra Modi

  அடுத்த செய்தி