ரஷ்யாவிடம் இருந்து 33 போர் விமானங்களை வாங்கும் இந்தியா: மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்..

ரஷ்யாவிடம் இருந்து 33 போர் விமானங்களை வாங்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

ரஷ்யாவிடம் இருந்து 33 போர் விமானங்களை வாங்கும் இந்தியா: மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்..
கோப்புப் படம்
  • Share this:
ரஷ்யாவிடம் இருந்து வாங்க உள்ள விமானங்களைல் 12 சுகோய் 30 MKI விமானங்கள் மற்றும் 21 மிக் 29ரக போர் விமானங்களும் அடங்கும். இந்த விமானங்கள் வாங்கும் திட்டத்தின் மதிப்பு 18,148 கோடி ரூபாயாகும்.

ஏற்கனவே உள்ள 59 மிக் ரக விமானங்களை தரம் உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் 38,900 கோடி ரூபாயில் பாதுகாப்புத் தளவாடங்கள் வாங்கவும் பாதுகாப்பு கவுன்சில் சம்மதம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க...குற்றவாளிகளைப் பிடிக்க சென்ற இடத்தில் ரவுடிகள் துப்பாக்கிச்சூடு - 8 போலீசார் உயிரிழப்பு

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ள 31,130 கோடி ரூபாய் மதிப்புள்ள தளவாடங்களும் வாங்கப்பட உள்ளன. இந்திய ராணுவம் மற்றும் கப்பற்படையில் பயன்படுத்தப்படும் அஸ்த்ரா என்ற 248 ஏவுகணைகளை வாங்கவும் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
First published: July 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading