Coronavirus | இந்தியாவில் ஒரே நாளில் 3.46 லட்சம் பேருக்கு கொரோனா; பலி எண்ணிக்கை 2,600ஐ கடந்தது!

Coronavirus | இந்தியாவில் ஒரே நாளில் 3.46 லட்சம் பேருக்கு கொரோனா; பலி எண்ணிக்கை 2,600ஐ கடந்தது!

கொரோனா

இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 25 லட்சத்தை கடந்தது.

  • Share this:
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3.5 லட்சத்தைக் நெருங்கியுள்ளது. ஒரே நாளில் 2,624 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,46,786 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1,66,10,481ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2,19,838 பேர் தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதனால் மொத்தமாகக் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,38,67,997 என்றளவில் உள்ளது. தற்போது நாடு முழுவதும் 25,52,940 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இதுவரை கொரோனாவுக்கு நாடு முழுவதும் 1,84,657 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,104 பேர் பலியாகினர். இதுவரை மொத்தம் 13,83,79,832 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.  இவ்வாறு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

ஒரே நாளில் உலகிலேயே அதிக கொரோனா தொற்று இந்தியாவில் பதிவாகியுள்ளது. இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,66,10,481 ஆக அதிகரித்துள்ளது. மரண எண்ணிக்கை 1,89,544 ஆக அதிகரித்துள்ளது.



நாட்டிலேயே கொரோனா பாதிப்பில் உச்சகட்ட மோசமான நிலையில் இருந்து வரும் மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 773 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள கொரோனா நிலை அறிக்கையில், நேற்று மட்டும் மாநிலம் முழுவதும் ஒரே நாளில் 66,836 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 74,045 பேர் நேற்று மட்டும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாட்டிலேயே அதிக அளவாக மகாராஷ்டிராவில் கொரோனா சிகிச்சை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை 6,91,851 ஆக உள்ளது.

அதிகபட்சமாக புனே மாவட்டத்தில் மட்டும் நேற்று 9,863 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதற்கடுத்து நாக்பூரில் 7,970 பேருக்கும், மும்பையில் 7,221 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள நிலை அறிக்கையின்படி நேற்று டெல்லியில், 24,331 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 348 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். டெல்லியில் 92,000 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.
Published by:Arun
First published: