ஹோம் /நியூஸ் /இந்தியா /

இந்தியாவில் ஓமைக்ரான் பாதிப்பு 1,000ஐ நெருங்கியது..

இந்தியாவில் ஓமைக்ரான் பாதிப்பு 1,000ஐ நெருங்கியது..

இதையெல்லாம் குறிப்பிட்டு, WHO டைரக்டர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், ஒமைக்ரான் போன்ற புதிய மாறுபாடுகளை கண்காணிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

இதையெல்லாம் குறிப்பிட்டு, WHO டைரக்டர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், ஒமைக்ரான் போன்ற புதிய மாறுபாடுகளை கண்காணிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

அதிகபட்சமாக டெல்லியில் 253 பேருக்கும், மகாராஷ்டிராவில் 252 பேருக்கும் ஓமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இந்தியாவில் ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக நாடுகளை பாடாய்ப்படுத்தி வரும் கொரோனா தொற்று, இந்தியாவில் இரண்டு அலைகளாக பரவி பெரும் பாதிப்பையும், கடுமையான அளவுக்கு உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியதுடன் பொருளாதார ரீதியாகவும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இருப்பினும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் பணிகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இதனால் தொற்று பரவுவது கட்டுக்குள் வந்தது.

இந்த நேரத்தில் தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் எனும் உருமாற்றம் அடைந்த கொரோனா தொற்று உலக நாடுகளில் வேகமாக பரவத் தொடங்கியது. இதுவரை 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கும் இத்தொற்று இந்தியாவில் முதல் முறையாக கடந்த டிசம்பர் 2ம் தேதியன்று கண்டறியப்பட்டது. அதன் பின்னர் பல மாநிலங்களிலும் ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டனர்.

Also read:  இந்து கோவில்களை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க விரைவில் சட்டம் - கர்நாடக முதல்வர்

இன்றைய நிலையில் இந்தியாவில் 961 பேருக்கு ஓமைக்ரான் பாதிப்பு இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக டெல்லியில் 253 பேருக்கும், மகாராஷ்டிராவில் 252 பேருக்கும் ஓமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த ஓமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கையில் இந்த 2 மாநிலங்களில் பாதிக்கும் மேலானவர்கள் இருக்கிறார்கள். ஓமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களில்  320 பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் 45 பேருக்கு இதுவரை ஓமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது, மேலும் 118 பேருக்கு ஓமைக்ரான் அறிகுறிகள் தென்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,154 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 82,402 ஆக உள்ளது. இதுவரை நோய்த்தொற்றால் 4,80,860 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தை கருத்தில் கொண்டால் மும்பையில் 2,510 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் 400 பேரும், கொல்கத்தாவில் 540 பேரும். சென்னையில் 294 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Also read:  செல்பி எடுக்க முயன்ற காங்கிரஸ் தொண்டர்.. செல்போனை தட்டிவிட்டு திட்டித்தீர்த்த டி.கே.சிவக்குமார்..

கொரோனாவுடன் ஒப்பிடும்போது ஒமைக்ரான் அதிக பாதிப்பை ஏற்படுத்தாது என்று பல்வேறு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் கொரோனாவை விட அதிவேகமாக பரவும் ஆற்றல் ஒமைக்ரான் வைரசுக்கு உண்டு என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக டெல்டா வேரியண்ட் வைரஸை காட்டிலும், 2 - 3 நாட்களில் ஒமைக்ரான் வைரஸ் இரட்டிப்பாக பரவும் தன்மை கொண்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

First published:

Tags: Omicron