பல தளர்வுகளுடன் மத்திய அரசின் புதிய ட்ரோன் விதிகள்- ஆகஸ்ட் 5-க்குள் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்

டிரோன்

பொதுமக்கள் பார்வைக்காக புதுப்பித்த ட்ரோன் விதிகள் 2021-யை மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

 • Share this:
  இந்தியாவில் ட்ரோன்கள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. பல்வேறு பணிகளுக்கு இந்த ட்ரோன்கள் பயன்படுகின்றன. இந்த புதிய விதிகள், இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்ட ஆளில்லாத விமான விதிகள் 2021-க்கு(uas rules 2021) மாற்றாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய ட்ரோன் விதிகளுக்கு பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கு ஆகஸ்ட் 5-ம் தேதிவரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விதிகள் நம்பிக்கை, சுய சான்றழித்தல் போன்றவற்றை கட்டமைக்கிறது என்று விமானப்போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  சரக்கு விநியோகங்களுக்காக புதிய ட்ரோன் செயல்படக்கூடக் கூடிய பகுதிகள் உருவாக்கப்படும். மேலும், வணிக ஒழுங்குமுறை நடவடிக்கைக்காக ட்ரோன் ஊக்குவிப்பு கவுன்சில் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்த புதிய விதிகளின் கீழ் ட்ரோனுக்கான தனிப்பட்ட அங்கீகார எண், சர்வதேச தரத்துக்கான சான்றிதழ், பராமரிப்புக்கான சான்றிதழ், இறங்குமதி அனுமதி, தற்போதைய ட்ரோன்களுக்கான அனுமதி, மாணவர்களுக்கான ரிமோட் பைலட் உரிமம் உள்ளிட்ட பல அனுமதிகள் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுளது. 25 விண்ணப்ப அனுமதிகளிலிருந்து 6-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

  அதற்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வணிக ஊக்குவிப்பு ஒற்றைச் சாளர ஆன்லைன் முறையில் டிஜிட்டல் ஸ்கை ப்ளாட்ஃபார்ம் உருவாக்கப்படும். அதில், குறைந்த அளவே ஆட்கள் அனுமதியளிக்க வேண்டிய தேவை இருக்கும். பெரும்பாலானவை ஆன்லைனில் தானாகவே அனுமதியளிக்கும் முறை இருக்கும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  எளிமையான முறையில் இருக்கும் டிஜிட்டல் ஸ்கை மேப், பச்சை, மஞ்சள், சிகப்பு என்ற மண்டலங்களாக பிரிக்கப்பட்டு இருக்கும். அந்த விதிமுறைகளுக்கு ஏற்றதுபோல ட்ரோன்களை இயக்கிக் கொள்ளலாம். இந்த ட்ரோன் விதிகள் 2021-ன் கீழ் அதிகபட்ச அபராதம் ஒரு லட்ச ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
  Published by:Karthick S
  First published: