Home » News » National » INDIA REJECTS PAKISTANS CLAIMS OF SHOOTING DOWN IAF AIRCRAFT ARRESTING PILOT SA

இந்திய விமானி பாகிஸ்தானால் கைது என்ற தகவலுக்கு விமானப்படை மறுப்பு!

இன்று காலை பத்கம் பகுதியில் இந்திய போர் விமானம் விபத்துக்குள்ளானது. இரு விமானிகள் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய விமானி பாகிஸ்தானால் கைது என்ற தகவலுக்கு விமானப்படை மறுப்பு!
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: February 27, 2019, 4:25 PM IST
  • Share this:
இந்திய விமானப்படை விமானம் தாக்கப்பட்டு விமானி கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் கூறிய நிலையில், இந்திய விமானப்படை அதற்க்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் நேற்று அதிகாலை ஊடுருவிய இந்திய விமானப்படை வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில், பயங்கவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலால் எப்போது வேண்டுமானாலும் பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தும் என்பதால், எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில், இன்று காலை பத்கம் பகுதியில் இந்திய போர் விமானம் விபத்துக்குள்ளானது. இரு விமானிகள் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.


இதற்கிடையே, ரஜோரி பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தானின் எப்-16 ரக போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. இந்த விமானம் பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீரில் உள்ள லாம் பள்ளத்தாக்கில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் விமானி பாராசூட் மூலம் தப்பிச்சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த இந்திய விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஒரு விமானம் பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீரில் விழுந்துள்ளதாகவும், மற்றொரு விமானம் இந்திய காஷ்மீரில் விழுந்துள்ளதாகவும் ட்வீட் செய்துள்ளார்.

அதாவது, பத்கம் பகுதியில் விழுந்து நொறுங்கிய இந்திய விமானம் பாகிஸ்தானால் சுட்டு வீழ்த்தப்பட்டது என்று அவர் கூறியுள்ளார். மேலும், ஆஸாத் காஷ்மீரில் விழுந்த இந்திய விமானத்தின் விமானியை கைது செய்துள்ளதாகவும் அவர் தனது ட்வீட்டில் குறிப்பிட்டிருந்தார்.இந்நிலையில், பாகிஸ்தானின் செய்திக்கு இந்திய விமானப்படை மறுப்பு தெரிவித்துள்ளது. இந்திய விமானிகள் யாரும் பாகிஸ்தானால் கைது செய்யப்படவில்லை, இந்திய விமானத்தை பாகிஸ்தான் தாக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.

Live Updates: இந்தியா -  பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் - உடனுக்குடன் அப்டேட்களை தெரிந்து கொள்ள க்ளிக் செய்க

First published: February 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading