Home /News /national /

மீண்டும் 4 ஆயிரத்தை தாண்டிய தினசரி கொரோனா பாதிப்பு - மகாராஷ்டிராவில் உஷார் நிலை

மீண்டும் 4 ஆயிரத்தை தாண்டிய தினசரி கொரோனா பாதிப்பு - மகாராஷ்டிராவில் உஷார் நிலை

மீண்டும் அதிகரிக்கும் தினசரி பாதிப்பு

மீண்டும் அதிகரிக்கும் தினசரி பாதிப்பு

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது மகள் பிரியங்கா காந்தி, கர்நாடகா சுகாதார அமைச்சர் சுதாகர் ஆகியோருக்கு தற்போது கோவிட் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    நாட்டின் தினசரி கோவிட் பாதிப்பு நிலவரத்தை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,041 பேருக்கு கோவிட் பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதன் மூலம், 84 நாள்களுக்குப் பின் இந்தியாவில் தினசரி கோவிட் பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

    நாட்டின் மொத்த கோவிட் பாதிப்பு 4 ,31,68,585ஆக உள்ளது. அதேபோல், கோவிட் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 21,177ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10 உயிரிழப்புகள் பதிவான நிலையில், நாட்டின் மொத்த கோவிட் உயிரிழப்பு எண்ணிக்கை 5 ,24,651ஆக உள்ளது.

    நாட்டில் இதுவரை 193.83 கோடி கோவிட் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. நாட்டில் கோவிட் அலை ஓய்ந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் வேளையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் மீண்டும் தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை தரும் அம்சமாக உள்ளது என அம்மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் தெரிவித்துள்ளார். நீண்ட காலத்திற்கு பின்னர் மீண்டும் தினசரி பாதிப்புக்கு எண்ணிக்கை அம்மாநிலத்தில் ஆயிரத்தை தாண்டியுள்ளது. எனவே, பாதிப்பு தொடர்ந்து உயர்வு கண்டால், கட்டாய முககவசம் என்பதை மாநில அரசு அமல்படுத்தும். நிலைமையை அரசு கூர்ந்து கவனித்து வருவதாக அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: வெளிநாட்டு பயணங்கள் மூலம் வெளியுறவுக் கொள்கையை வலுபடுத்திய மோடி- ஒரு அலசல்

    காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது மகள் பிரியங்கா காந்தி, கர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் ஆகியோருக்கு தற்போது கோவிட் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சீனா, கொரியா ஆகிய நாடுகளில் நான்காம் அலை தாக்கம் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக காணப்படும் நிலையில், இந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Corona, Covid-19

    அடுத்த செய்தி