இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 41 ஆயிரத்தை கடந்தது!

மாதிரிப் படம்

தொடர்ந்து, கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 4,22,660 ஆக குறைந்துள்ளது.

 • Share this:
  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 41,157 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பு அளவை விட 7.4 சதவீதம் கூடுதலாகும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாட்டில் கடந்த 24 மணி புதிதாக 41,157 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மொத்த பாதிப்பானது 3,11,06,065 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 518 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த உயிரிப்பு எண்ணிக்கையும் 4,13,609 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து, கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 4,22,660 ஆக குறைந்துள்ளது.

  கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி நாட்டில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்தது. தொடர்ந்து, ஆக.23ல் 30 லட்சத்தை கடந்தது, செப்.5ல் 40 லட்சத்தை கடந்தது. செப்.16ல் 50 லட்சத்தை கடந்தது. அக்.29ல் 90 லட்சத்தை கடந்தது. நவ.20ல் ஒரு கோடியை கடந்தது. அதைத்தொடர்ந்து, மே.4ம் தேதி கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 கோடியை கடந்த நிலையில், ஜூன் இறுதியில் 3 கோடியை கடந்துள்ளது.

  Also read: விடிய விடிய கனமழை- தண்ணீரில் மிதக்கும் மும்பை: 20க்கு மேற்பட்டோர் பலி!

  நாடு முழுவதும் இதுவரை 40.49 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டள்ளது. தொடர்ந்து, இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை ஆகஸ்ட் மாத இறுதியில் பாதிப்பை ஏற்படுத்த தொடங்கலாம் என்றும், எனினும், அது இரண்டாவது அலை போன்ற பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

   
  Published by:Esakki Raja
  First published: