மலேரியாவைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா சிறப்பாகவே செயல்படுகிறது - உலக சுகாதார மையம்

இந்தியாவின் பங்களிப்பால் தென்கிழக்கு ஆசியா நாடுகளில் மலேரியாவின் தாக்குதல் 70 சதவிகிதம் குறைந்துள்ளது.

மலேரியாவைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா சிறப்பாகவே செயல்படுகிறது - உலக சுகாதார மையம்
மலேரியா
  • News18
  • Last Updated: December 4, 2019, 12:59 PM IST
  • Share this:
மலேரியா மற்றும் மலேரியா மரணங்களைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா சிறப்பாகச் செயல்பட்டு வருவதாக உலக சுகாதார மையம் பாராட்டு தெரிவித்துள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு மலேரியா பாதிப்பால் ஏற்பட்ட இறப்புகள் 2018-ல் 41 சதவிகிதம் குறைந்துள்ளது. இந்தியாவில் தொடர்ந்து மலேரியாவுக்கு எதிரான முன்னெடுப்புகள் மிகச்சிறப்பாக இருப்பதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. 2017-ம் ஆண்டு மலேரியா நோய் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 93,48,000 மற்றும் பலியானோரின் எண்ணிக்கை 16,310 ஆகும்.

கடந்த 2018-ம் ஆண்டில் இந்தியாவில் 67,37,000 பேர் மலேரியா நோய் தாக்கப்பட்டவர்கள். பலியானவர்க 9,620 ஆகும். இதே போல் தொடர்ந்து கட்டுப்படுத்தி வருவதால் வருகிற 2030-ம் ஆண்டு மலேரியா இல்லா நாடாக இந்தியா உருவாகும் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.


இந்தியாவின் பங்களிப்பால் தென்கிழக்கு ஆசியா நாடுகளில் மலேரியாவின் தாக்குதல் 70 சதவிகிதம் குறைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவன மண்டல் இயக்குநர் பூனம் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும் பார்க்க: அன்லிமிடெட் விடுமுறைகள் ஊதியத்துடன் வழங்கப்படும்...திறமையான பணியாளர்களை ஈர்க்க புது ஐடியா!
First published: December 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...