Home /News /national /

இன்றைய கோவிட் நிலவரம் - இந்தியாவில் புதிதாக 2,487 பேருக்கு கொரோனா பாதிப்பு

இன்றைய கோவிட் நிலவரம் - இந்தியாவில் புதிதாக 2,487 பேருக்கு கொரோனா பாதிப்பு

கொரோனா

கொரோனா

கடந்த சில வாரங்களாக அதிகரித்து வந்த தினசரி பாதிப்பு எண்ணிக்கை தற்போது மெல்ல குறையத் தொடங்கியுள்ளது.

    நாட்டின் தினசரி கோவிட் பாதிப்பு நிலவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2 ஆயிரத்து 487 பேருக்கு கோவிட் பாதிப்பு பதிவாகியுள்ளது. இதையடுத்து நாட்டின் மொத்த கோவிட் பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 21 ஆயிரத்து 599ஆக உயர்ந்துள்ளது.

    நாட்டில் தற்போது 17 ஆயிரத்து 692 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதிதாக 13 உயிரிழப்புகள் பதிவான நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 214 ஆக அதிகரித்துள்ளது. கடந்த சில வாரங்களாக அதிகரித்து வந்த தினசரி பாதிப்பு எண்ணிக்கை தற்போது மெல்ல தனியத் தொடங்கியுள்ளது. இதுவரை 4 கோடியே 25 லட்சத்து 79 ஆயிரத்து 693 பேர் கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளனர்.

    நாட்டின் கோவிட் தொற்று உயிரிழப்பு விகிதம் 1.22 சதவீதமாக உள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 854 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. அதற்கு அடுத்தபடியாக கேரளாவில் 69 ஆயிரத்து 363 உயிரிழப்புகளும், கர்நாடகாவில் 40 ஆயிரத்து 105 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. 38 ஆயிரத்து 25 உயிரிழப்புகளுடன் தமிழ்நாடு நான்காவது இடத்தில் உள்ளது.

    இதையும் படிங்க: மணமேடையில் நடனமாடி திருமணம் முடிந்த கையுடன் மணப்பெண் தற்கொலை

    கடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் 15 லட்சத்து 53 ஆயிரத்து 750 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை ஒட்டுமொத்தமாக 191 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.
    Published by:Kannan V
    First published:

    Tags: Corona, Covid-19

    அடுத்த செய்தி