இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள்: ஒரே நாளில் 1,185 பேர் பலி!

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள்: ஒரே நாளில் 1,185 பேர் பலி!

கொரோனா உயிரிழப்புகள்

இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பில் சிகிச்சையில் உள்ளவர்களின் பங்கு 10.46% ஆக உள்ளது.

  • Share this:
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2.17 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. தற்போது 2ம் அலை நாடு முழுவதும் உச்சகட்டத்தை எட்டிவருகிறது. இதுவரை இல்லாத வகையில் நேற்று முதல் முறையாக 2 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் தொடர்ந்து 2வது நாளாக இன்றும் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை கடந்துள்ளது.

நாட்டில் கொரோனா நிலை குறித்து மத்திய சுகாதாரத்துறை தினந்தோறும் அறிக்கை வெளியிட்டு வருகிறது. இதன்படி இன்று (ஏப்ரல் 16) வெளியிட்ட அறிக்கையின் படி கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2,17,353 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,185 பேர் நாடு முழுவதும் நோய்த்தொற்றால் உயிரிழந்துள்ளனர். 1,18,302 பேர் நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

இதன் மூலம் நாட்டில் மொத்தமாக கொரோனா தொற்றால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை 1,42,91,917 ஆகவும், குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,25,47,866 ஆகவும், உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,74,308 ஆகவும் அதிகரித்துள்ளது. கொரோனா சிகிச்சையில் இருந்து வருபவர்களின் எண்ணிக்கை 15 லட்சமாக (15,69,743) அதிகரித்துள்ளது. இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பில் சிகிச்சையில் உள்ளவர்களின் பங்கு 10.46% ஆக உள்ளது. மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து மீட்சி அடைவோரின் சராசரியும் 88.31% ஆக குறைந்துள்ளது.

அதிகரிக்கும் கொரோனா : குவியும் சடலங்களை குப்பை வண்டியில் எடுத்துச் செல்லும் அவலம்


கடந்த சில தினங்களுக்கு முன்னர் உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரேசிலை பின்னுக்குத் தள்ளி 2ம் இடத்தை பிடித்தது இந்தியா. இருப்பினும் இந்தியாவைக் காட்டிலும் பிரேசிலில் பலி எண்ணிக்கை இந்தியாவை விட 3 மடங்காக உள்ளது. பிரேசிலில் தினசரி பலி எண்ணிக்கை தினந்தோறும் 3,500க்கும் அதிகமாக ஏற்பட்டு வருகிறது.

இந்தியாவில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி தினசரி கொரோனா பாதிப்பு 72,000 என்ற அளவில் இருந்த நிலையில் அடுத்த 15 நாட்களில் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.

ஏப்ரல் 1ம் தேதி முதல் இன்று வரை தினசரி கொரோனா பாதிப்பு:

ஏப்ரல் 1 : 72,330
ஏப்ரல் 2: 81,466
ஏப்ரல் 3 : 89,129
ஏப்ரல் 4 : 93,249
ஏப்ரல் 5 : 103,558
ஏப்ரல் 6: 96,982
ஏப்ரல் 7 : 115,736
ஏப்ரல் 8 : 126,879
ஏப்ரல் 9: 131,968
ஏப்ரல் 10 : 145,384
ஏப்ரல் 11 : 152,879
ஏப்ரல் 12 : 168,912
ஏப்ரல் 13 : 161,736
ஏப்ரல் 14 : 184,372
ஏப்ரல் 15 : 200,739
ஏப்ரல் 16 : 217, 353

தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் 7987 பேருக்கு புதிதாக கொரேனா தொற்று உறுதியாகி உள்ளது. மேலும் 4176 பேர் கொரேனாவிலிருந்து குணமடைந்துள்ள நிலையில் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
Published by:Arun
First published: