Home /News /national /

இந்தியாவில் ஒரே நாளில் 12,213 பேருக்கு கொரோனா தொற்று..

இந்தியாவில் ஒரே நாளில் 12,213 பேருக்கு கொரோனா தொற்று..

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தமிழகத்தில் தற்போது கொரோனாவால் சிகிச்சை எடுத்து வருபவர்களின் எண்ணிக்கை 2,313 ஆக உள்ளது.

    இந்தியாவின் தினசரி கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 24 மணி நேரத்தில் புதிதாக 12 ,213 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

    அதிகபட்சமாக, மகாராஷ்டிராவில் 4,024 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2 நாட்களில் மட்டும் தொற்று எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது.

    தொடர்ந்து, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 552 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் தற்போது கொரோனாவால் சிகிச்சை எடுத்து வருபவர்களின் எண்ணிக்கை 2,313 ஆக உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    நாடு தழுவிய அளவில், தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிகை, 58,215-ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், தொற்றுக்கான சிகிச்சைக்குப் பிறகு 7,624 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். சிகிச்சை பலனின்றி கொரோனாவால் மேலும் 11 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,24,792-ஆக உயர்ந்துள்ளது.

    நாடு முழுவதும் செலுத்தப்பட்டு உள்ள தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 195 கோடியே 67 லட்சத்தைக் கடந்துள்ளது. தொடர்ந்து, நாட்டில் சிறார்கள் மற்றும் வயது வந்தோருக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டப்பணிகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Corona, Covid-19

    அடுத்த செய்தி