ஆஸ்திரேலியாவை தொடர்ந்து இந்தியாவும் கூகுள், பேஸ்புக் நிறுவனங்களிடையே செய்திகளுக்கான ராயல்டி கேட்க முடிவு?

ஆஸ்திரேலியாவை தொடர்ந்து இந்தியாவும் கூகுள், பேஸ்புக் நிறுவனங்களிடையே செய்திகளுக்கான ராயல்டி கேட்க முடிவு?

Google

கூகுள் சர்ச் என்ஜின் நிறுத்தபடும்பட்சத்தில், அது கூகுளுக்கு மட்டுமின்றி, ஆஸ்திரேலிய மக்களையும் கடுமையாக பாதிக்கும் என தெரிவித்திருந்தார்.

  • Share this:
ஆஸ்திரேலிய ஊடக நிறுவனங்களின் செய்திகளை தங்களின் இணைய தளங்களில் வெளியிடுவதற்கு கூகுள் (Google) மற்றும் பேஸ்புக் (Facebook) நிறுவனங்கள், செய்தி நிறுவனங்களுக்கு ராயல்டி கட்டணம் செலுத்த வேண்டும் என்ற புதிய சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தப் போவதாக ஆஸ்திரேலியா கடந்த மாதம் அறிவித்திருந்தது.

ஆஸ்திரேலிய ஊடக நிறுவனங்களின் செய்திகளை தங்களின் இணைய தளங்களில் வெளியிடுவதற்கு கூகுள் (Google) மற்றும் பேஸ்புக் (Facebook) நிறுவனங்கள், செய்தி நிறுவனங்களுக்கு ராயல்டி கட்டணம் செலுத்த வேண்டும் என்ற புதிய சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தப் போவதாக ஆஸ்திரேலியா கடந்த மாதம் அறிவித்திருந்தது. ஆனால் அதற்கு அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள் மற்றும் பேஸ்புக்  தங்களின் எதிர்ப்பைப் தெரிவித்து வருகிறது. இந்த சட்டம் கடினமானது எனவும், இது உள்ளூரில் மக்கள் தங்கள் சேவைகளைப் பயன்படுத்துவதை பாதிக்கும் எனவும் தொழில்நுட்ப நிறுவனங்கள் கருத்து தெரிவித்து வந்தன

ஒருவேளை இந்தச் சட்டங்கள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்றால், செய்திகளின் மதிப்பைத் தீர்மானிக்க கூகுள் மற்றும் ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் ஊடக நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்த இந்தச் சட்டம் ஏற்பாடு செய்யும் எனவும் அரசாங்கம் தெரிவித்திருந்தது. இது தொடர்பான செனட் விசாரணைக்கு ஆஜரான கூகுள் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து பிரிவின் நிர்வாக இயக்குனர் மெல் சில்வா, இந்தச் சட்டங்களில் வேலை செய்ய முடியாது எனவும் இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், கூகுள் சர்ச் சேவையை ஆஸ்திரேலியாவில் நிறுத்துவதை தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை எனவும் தெரிவித்தார்

கூகுள் சர்ச் என்ஜின் நிறுத்தபடும்பட்சத்தில், அது கூகுளுக்கு மட்டுமின்றி, ஆஸ்திரேலிய மக்களையும் கடுமையாக பாதிக்கும் என தெரிவித்திருந்தார். கூகுள் நிறுவனத்தின் விளக்கத்துக்கு உடனடியாக பதிலடி கொடுத்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் மோரிசன், கூகுள் நிறுவனத்தின் மிரட்டலுக்கு நாங்கள் அஞ்சமாட்டோம் என கூறியுள்ளார். அரசு வகுத்துள்ள விதிகளின்படி மட்டுமே தொழில் நிறுவனங்கள் செயல்பட முடியும் என, புதிய சட்டம் நாடாளுமன்றத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்தன் அரசு நாடாளுமன்றம் வழியாக இந்தச் சட்டத்தை, 2021-ம் ஆண்டில் நடைமுறைபடுத்துவதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கும் கூகுள் நிறுவனத்திற்கும் மோதல் முற்றியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்

ஆஸ்திரேலிய அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து, நாட்டில் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் செய்தி வெளியீடுகளுக்கு இடையில் வருவாய் பகிர்வுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க கனேடிய அரசாங்கமும் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் தொழில்நுட்ப ஜாம்பவான்கள் மீது விரிவான கட்டணங்களை விதிப்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியமும் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது. அதேபோல, இந்தியாவில் கூகுள் சர்ச் எஞ்சின் மற்றும் பேஸ்புக் ஆகியவை அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன

அத்தியாவசிய தேவைகளுள் ஒன்றாக கூகுள் சர்ச் மாறிவிட்டதால், கூகுள் நிறுவனத்துக்கு அதிக லாபம் கிடைக்கிறது. இதனால் மத்திய அரசும் தங்களது செய்தி ஊடகங்களுடன் வருவாய் பகிரும் சட்டத்தை இயற்றும் வாய்ப்பு ஏற்படலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பான சட்டம் இயற்றுவதற்கான சாதக பாதகங்கள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. எவ்வாறாயினும், இந்த பயன்பாடுகள் அரசாங்கத்திடமிருந்தும், நிர்வாக முடிவுகளிலிருந்தும் செய்யப்படுகையில், கூகுள் மற்றும் பேஸ்புக் தங்களது செய்தி வணிகத்தை இயக்கும் விதத்தில் அடிப்படை கட்டமைப்பின் மாற்றத்தைக் காண்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Published by:Ram Sankar
First published: