Home /News /national /

2030க்குள் கால்நடை நோய்கள் முற்றாக கட்டுப்படுத்தப்படும் - பிரதமர் மோடி நம்பிக்கை

2030க்குள் கால்நடை நோய்கள் முற்றாக கட்டுப்படுத்தப்படும் - பிரதமர் மோடி நம்பிக்கை

உலக பால் வள உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை

உலக பால் வள உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை

பால் பொருட்கள் உற்பத்தியில் இந்தியா முன்னிலையில் இருப்பதாகக் கூறிய பிரதமர், பால் பண்ணை முறையில் இடைத்தரகர்கள் தலையீடு கிடையாது என்றார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Noida, India
    2030க்குள் கால்நடைகளுக்கு ஏற்படும் நோயை முற்றிலும் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

    உலக பால் வள உச்சி மாநாடு 2022-ஐ உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். வரும் 15-ம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், 50 நாடுகளைச் சேர்ந்த தொழில்துறை தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நாடு முழுவதும் பால் வளத்துறை மூலம் 8 கோடி குடும்பங்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாக தெரிவித்தார். பால் பொருட்கள் உற்பத்தியில் இந்தியா முன்னிலையில் இருப்பதாகக் கூறிய பிரதமர், பால் பண்ணை முறையில் இடைத்தரகர்கள் தலையீடு கிடையாது என்றார். இதனால், நுகர்வோர்களிடம் வசூலிக்கப்படும் தொகையில் 70 விழுக்காடு விவசாயிகளுக்கு செல்வதாகவும் குறிப்பிட்டார்.

    கடந்த 8 ஆண்டுகளில் பால் உற்பத்தி 44 விழுக்காடு அதிகரித்திருப்பதால், விவசாயிகளுக்கு வருமானம் உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். கால்நடைகளுக்கு ஏற்படும் தோல் கட்டி நோயை தடுக்க விஞ்ஞானிகள் தடுப்பூசி கண்டுபிடித்துள்ளதாகக் கூறிய பிரதமர், 2025-ம் ஆண்டுக்குள் அனைத்து கால்நடைகளுக்கும் கால், வாய்புண் நோய் மற்றும் புருசெல்லோசிஸ் தடுப்பூசி போடப்படும் என்று கூறினார்.

    இதையும் படிங்க: டிராபிக்கில் சிக்கிய கார்... 3 கிமீ ஓடிச் சென்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவருக்கு குவியும் பாராட்டு

    2030க்குள் இந்த நோய்களிலிருந்து கால்நடைகள் முற்றிலும் விடுபடுவதை இலக்காகக் கொண்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். இந்த நிகழ்வில் மத்திய கால்நடை அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் பங்கேற்றனர்.
    Published by:Kannan V
    First published:

    Tags: PM Modi, Yogi adityanath

    அடுத்த செய்தி