அமெரிக்காவிடம் இருந்து 72,000 சிக் 716 ரக எந்திரத் துப்பாக்கிகள் வாங்க இந்தியா முடிவு..

சீனாவுடனான எல்லைத்தகராறு முடிவுக்கு வந்துள்ள நிலையில், அமெரிக்காவிடம் இருந்து 72 ஆயிரம் சிக் 716 ரக எந்திர துப்பாக்கிகளை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

அமெரிக்காவிடம் இருந்து 72,000 சிக் 716 ரக எந்திரத் துப்பாக்கிகள் வாங்க இந்தியா முடிவு..
மாதிரிப் படம்
  • Share this:
ஏற்கனவே 72,000 சிக் 716 ரக எந்திர துப்பாக்கிகள் வாங்கப்பட்டு படைகளிடம் வழங்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 72,000 எந்திர துப்பாக்கிகளை வாங்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சுமார் ஒன்றரை லட்சம் இறக்குமதி எந்திர துப்பாக்கிகளை பயங்கரவாத தடுப்பு மற்றும் எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் நீண்டகாலமாக பயன்படுத்தப்பட்டு வரும் ஐ.என்.எஸ்.ஏ.எஸ். ரக தாக்குதல் துப்பாக்கிகள் பயன்பாட்டில் இருந்து விலக்கிக்கொள்ளப்பட உள்ளன.

Also see:



எஞ்சிய படைகளுக்கு இந்திய - ரஷ்ய கூட்டுத்தயாரிப்பில் உருவாகும் ஏ.கே. 203 துப்பாக்கிகள் வழங்கப்பட உள்ளன. அண்மையில் 16,000 இலகு ரக எந்திர துப்பாக்கிகளுக்காக இஸ்ரேலிடம் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
First published: July 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading