ஹோம் /நியூஸ் /இந்தியா /

கர்தார்பூர் நிகழ்ச்சி - பாக். அழைப்பை நிராகரித்தார் சுஷ்மா

கர்தார்பூர் நிகழ்ச்சி - பாக். அழைப்பை நிராகரித்தார் சுஷ்மா

சுஷ்மா ஸ்வராஜ்,

சுஷ்மா ஸ்வராஜ்,

இந்தியா சார்பில் பாகிஸ்தானில் நடக்கும் கர்தார்பூர் சாலை அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துக்கொள்ள 2 மத்திய அமைச்சர்கள் பங்கேற்பார்கள் என்று சுஷ்மா தெரிவித்துள்ளார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

இந்தியா பாகிஸ்தான் இடையேயான கர்தார்பூர் சாலை தொடக்க விழாவுக்கு வருமாறு பாகிஸ்தான் விடுத்த அழைப்பு விடுத்திருந்த நிலையில், வேறு நிகழ்ச்சிகள் இருப்பதால் கலந்து கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் குருதாஸ்பூரையும், பாகிஸ்தானில் உள்ள குருதுவாராவையும் இணைக்கும் கர்தார்பூர் சாலைக்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது.

கர்தார்பூர் சீக்கிய கோவில்

பாகிஸ்தான் பகுதியில் அமையவிருக்கும் சாலைப் பணிகளுக்கான தொடக்க விழா வருகிற 28-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இதில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பங்கேற்க உள்ள நிலையில், இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு பாகிஸ்தான் அமைச்சர் ஷா முகம்மது குரோஷி அழைப்பு விடுத்திருந்தார்.

சுஷ்மா ஸ்வராஜ் - அமைச்சர் ஷா முகம்மது குரோஷி

ஆனால், ஏற்கெனவே திட்டமிட்ட பணிகள் இருப்பதால், மத்திய அமைச்சர்கள் ஹர்ஷிம்ரத் கவுர் மற்றும் ஹர்தீப் சிங் புரி ஆகியோர் பங்கேற்பார்கள் என சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

Also see...

Published by:Vaijayanthi S
First published:

Tags: India and Pakistan, Sushma Swaraj