இந்திய வரலாற்றில் மறக்க முடியாத 1971ம் ஆண்டு போர்!

இந்தியா- பாகிஸ்தான் யுத்தம்

இந்தியா-பாகிஸ்தான் போரின் 50-ம் ஆண்டு பொன்விழாவை தற்போது கொண்டாடுகிறோம்.இதற்காக பிரதமர் மோடி ஏற்றி வைத்த வெற்றி ஜோதி, இந்தியா முழுக்க வலம் வந்து கொண்டிருக்கிறது.

  • Share this:
சுதந்திர இந்தியா எத்தனையோ போர்களை சந்தித்திருந்தாலும் 1971ல் இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் மறக்கமுடியாதது. தற்போது அதன் பொன்விழாவை கொண்டாடி வருகிறோம்.

இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் தனி நாடாக பிரிந்த பின்னர், மேற்கு பாகிஸ்தான் கிழக்கு பாகிஸ்தானுக்கு போதிய நிதியுதவியும் அங்கீகாரமும் அளிக்காமல்  இருந்து வந்தது. இதனால் கிழக்கு பாகிஸ்தானை சேர்ந்த வங்க மொழி பேசும் மக்கள் குமுறலில் இருந்து வந்தனர்.  இந்த விவகாரத்தில் கிழக்கு பாகிஸ்தானுக்கு ஆதரவாக இந்தியா  இருந்தது. இது போர் என்னும் சூழலுக்கு இட்டு சென்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

1971 டிசம்பர் 3ஆம் நாள் களத்தில் இறங்கியது இந்தியாவும் பாகிஸ்தானும். இந்தியாவின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் ராணுவம், டிசம்பர் 16ம் தேதி 93 ஆயிரம் வீரர்களுடன் நிபந்தனையின்றி சரணடைந்தது. 13 நாட்கள் நடைபெற்ற இந்தப் போர் சரித்திரத்தின் பக்கங்களில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி, பங்களாதேஷ் என்ற தனி நாட்டை உருவாக்கியது.

மேலும் படிக்க: ‘இ-ருபி’ புதிய டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறை அறிமுகம்: பயன்படுத்துவது எப்படி?


இந்தப் போரின் 50-ம் ஆண்டு பொன்விழாவை தற்போது கொண்டாடுகிறோம்.இதற்காக பிரதமர் மோடி ஏற்றி வைத்த வெற்றி ஜோதி, இந்தியா முழுக்க வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த ஜோதி சென்னையை வந்தபோது நடைபெற்ற நிகழ்ச்சியில், போரில் பங்கேற்ற ராணுவ வீரர்கள் அவர்களது குடும்பத்தினர் பங்கேற்று தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தென்மண்டல ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அருண், எத்தனையோ போர்கள் வந்தாலும் 1971 போர் தான், இந்தியாவுக்கு மிகப்பெரிய பெருமையை உலக அரங்கில் ஏற்படுத்தித் தந்தது என்று குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: இந்தியா முழுதும் 24 போலிப் பல்கலைக் கழகங்கள்; உ.பி.யில் அதிகம்!


போரில் பங்கேற்ற திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த கர்னல் கிருஷ்ணசாமி, போர் நாட்கள் இன்னமும் மனதில் ஆழமாக பதிந்து இருக்கிறது என்றார்.

பல விதமான சோகங்களும், தியாகங்களும், வடுக்களும், வலிகளும் நிறைந்த வரலாற்று நிகழ்வு 1971 போர். பங்களாதேஷ் என்ற ஒற்றை தேசம் உருவாவதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த போரின் பொன்விழாவை தற்போது தேசம் மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் கொண்டாடி வருகிறது.

 
Published by:Murugesh M
First published: