Home /News /national /

இ-விசா இருந்தால்தான் ஆப்கானிஸ்தானிலிருந்து வருபவர்களுக்கு அனுமதி -மத்திய அரசு

இ-விசா இருந்தால்தான் ஆப்கானிஸ்தானிலிருந்து வருபவர்களுக்கு அனுமதி -மத்திய அரசு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வருபவர்கள் இ-விசா வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

  ஆப்கானிஸ்தானில் ஆட்சியை தாலிபான்கள் கைப்பற்றிய பின்னர், அந்நாட்டு மக்களும் அங்கு வசித்துவரும் மற்ற நாட்டினரும் வெளியேற முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தான் குடிமக்களுக்கு ஏற்கெனவே அளித்த விசாக்களை மத்திய அரசு தடை செய்துள்ளது. அதற்கு பதிலாக இ-விசா வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என மத்திய உள்துறை அறிவித்துள்ளது. ஏற்கெனவே விசா அளிக்கப்பட்டவர்கள் தங்களது பாஸ்போர்ட்டை தொலைத்திருக்க கூடும் என்பதால், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட்டை தொலைத்தவர்கள் மீண்டும் அதற்கு விண்ணப்பித்து பெற்றவுடன் இ-விசா பெற்று இந்தியா திரும்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  இந்த விசா 6 மாத காலத்திற்கு செல்லுபடியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. முன்பு ஆப்கானிஸ்தான் குடிமக்களுக்கு உள்துறை அனுமதித்த பின்பே விசா வழங்கப்பட்டு வந்தது.

  ஆப்கனை சேர்ந்தவர்கள் யாரும் நாட்டை விட்டு செல்ல வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ள தாலிபான்கள், பாதுகாப்பு கருதி அவர்கள் வெளியேறவில்லை என்றும் மேற்கத்திய நாடுகளில் வேலைவாய்ப்புகளை பெறவே தப்பிச் செல்வதாகவும் கூறியுள்ளனர். இதனிடையே, பயங்கரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தான் புகலிடமாக மாறிவிடக் கூடாது என ஜி7 நாடுகள் வலியுறுத்தியுள்ளன. காணொளி மூலமாக நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி நாடுகளின் தலைவர்கள், மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களை பாதுகாப்புடன் மீட்க தாலிபான்கள் ஒத்துழைக்க வேண்டும என வலியுறுத்தினர்.

  மீட்புப் பணிக்கான அவகாசம் நிறைவடையும் ஆகஸ்ட் 31- ஆம் தேதியின் இறுதி நிமிடங்கள் வரை வெளியேற்றம் நடைபெறும் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.

  இதுகுறித்து பேசிய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ‘காபூல் விமானநிலையத்தில் நிலைமை சிறப்பாக இல்லை. அங்கு பொது ஒழுங்கு பிரச்சினைகள் உள்ளன. ஆப்கனை விட்டு வெளியேற முயற்சிப்பவர்களுக்கு அவை கொடூரமான சூழல். எங்கள் ராணுவத்தினரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.

  ஆப்கானிஸ்தானில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஆபத்தானது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார். எந்த சூழலிலும் மனித உரிமைகள் மீறப்படக் கூடாது என்றும், பெண்கள் மற்றும் குழந்தைகளை தாலிபான்கள் கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்றும் ஜி7 தலைவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர்.

  ஆப்கானிஸ்தானில் அமைக்கப்படும் புதிய அரசு, அதன் செயல்பாடுகளை வைத்தே அங்கீகரிக்கப்படும் என்றும் கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக கண்ணியத்துடன் வாழ்ந்த மக்களுக்கு அதே வாழ்க்கை முறையை தொடர உரிமை உண்டு என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதனிடையே அமெரிக்காவின் உளவுத் துறை தலைவர் வில்லியம் பர்ன்ஸ், தாலிபான் பயங்கரவாத தலைவர்களில் ஒருவரான அப்துல் கனி பரடாரை காபூலில் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை உறுதிப்படுத்த முடியாத நிலையில், அவ்வாறு சந்திப்பு நடைபெற்றிருந்தால், தற்போதைய சூழலில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
  Published by:Karthick S
  First published:

  Tags: Afghanistan

  அடுத்த செய்தி