இந்தியாவில் டெல்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் வாணவேடிக்கை, ஆட்டம், பாட்டத்துடன் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியிருந்தன.
தலைநகர் டெல்லியில் உள்ள கன்னாட் பிளேஸ் பகுதியில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள், புத்தாண்டை வரவேற்கும் விதமாக ஆடிப்பாடி மகிழ்ந்தனர். ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
மும்பை இந்தியா கேட் பகுதியில், ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். அப்போது, விண்ணைப் பிளக்கும் வகையில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து, ஆடிப்பாடி மகிழ்ந்தனர். பாந்த்ரா, மரைன் டிரைவ் உள்ளிட்ட பகுதிகளிலும் ஏராளமானோர் கூடி புத்தாண்டை வரவேற்றனர்.
இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் கடும் குளிரிலும் ஏராளமான பொதுமக்கள் ஒன்றுகூடி, புத்தாண்டை மகிழ்ச்சிபொங்க வரவேற்றனர்.
பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில், ஆயிரக்கணக்கானோர் திரண்டு புத்தாண்டை வரவேற்று, வழிபாடு நடத்தினர்.
கர்நாடக தலைநகர் பெங்களூருவில், பெருந்திரளானோர் ஒன்றுகூடி புத்தாண்டை உற்சாகத்துடன் வரவேற்று, புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் உற்சாகமாக நடனமாடி கொண்டாடினர். அப்போது ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
உத்தரகாண்ட் மாநிலம் அவுலியில், இந்தோ திபெத் எல்லை பாதுகாப்புப் படையினர், 2020ம் ஆண்டை வரவேற்று, உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
Published by:Yuvaraj V
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.