Home /News /national /

''எந்த நாட்டையும் தாக்கும் பழக்கம் இந்தியாவுக்கு கிடையாது'' : பாதுகாப்புத்துறை அமைச்சர்

''எந்த நாட்டையும் தாக்கும் பழக்கம் இந்தியாவுக்கு கிடையாது'' : பாதுகாப்புத்துறை அமைச்சர்

ராஜ்நாத் சிங்

ராஜ்நாத் சிங்

உத்தரப்பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தீபாவளி மற்றும் ஹோலி பண்டிகையின்போது சமையல் எரிவாயு சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும்.

    உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், எந்த நாட்டையும் தாக்கும் பழக்கம் இந்தியாவுக்கு இல்லை என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

    நேட்டோ அமைப்பில் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷ்யா கடந்த வியாழன் அன்று முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. ராணுவ பலம் மிகவும் குறைவாக உள்ள உக்ரைன் நாட்டின் மீது வல்லரசு நாடான ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல், உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ரஷ்யாவுக்கு எதிராக ஐநாவில் தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, அதன் நட்பு நாடான இந்தியா ரஷ்யாவுக்கு எதிராக வாக்களிக்கவில்லை. இந்நிலையில் எந்த நாட்டையும் தாக்கும் பழக்கம் இந்தியாவுக்கு கிடையாது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

    இதையும் படிங்க - 'பாஜக ஆளும் மாநிலங்களில் வருமானமும் இல்லை; வரியும் இல்லை' : சிவசேனா கடும் விமர்சனம்

    உத்தரப்பிரதேச மாநிலம் பைரியாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று ராஜ்நாத் சிங் பேசியதாவது-

    உக்ரைனில் என்ன நடந்தாலும் சரி, இந்தியாவைப் பொருத்தளவில் நாம் அமைதியைத்தான் விரும்புகிறோம். உக்ரைன் - ரஷ்யா மோதல் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வருவதில் இந்தியா முக்கிய பங்கு வகித்து வருகிறது.தானாக முன்வந்து முதலில் தாக்குதல் நடத்தும் பழக்கம் இந்தியாவுக்கு கிடையாது. உலகம் அமைதி பெற வேண்டும் எனில் அனைத்து நாடுகளும் இந்த கொள்கையை கடைபிடிக்க வேண்டும்.

    உத்தரப்பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தீபாவளி மற்றும் ஹோலி பண்டிகையின்போது சமையல் எரிவாயு சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதையும் படிங்க - உக்ரைனில் சிக்கிய 240 இந்தியர்களுடன் 3-வது விமானம் இந்தியா திரும்பியது

    உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்துள்ள நிலையில் இன்றைக்கு 5-ம் கட்ட வாக்குப்பதிவு நடந்து வருகிறது. மார்ச் 3 மற்றும் மார்ச் 7 ஆகிய தேதிகளில் மீதமுள்ள 2 கட்ட வாக்குப்பதிவு நடைபெறும். முடிவுகள் மாச் 10-ம்தேதி அறிவிக்கப்படுகின்றன.
    Published by:Musthak
    First published:

    Tags: Uttar pradesh

    அடுத்த செய்தி