Home /News /national /

இந்தியாவில் குளிர்காலம் கடுமையாக இருக்கும் - வானிலை மையம் எச்சரிக்கை!

இந்தியாவில் குளிர்காலம் கடுமையாக இருக்கும் - வானிலை மையம் எச்சரிக்கை!

குளிர்காலம்

குளிர்காலம்

முதலில் குளிர்காலத்திற்காக ஏற்றவாறு உங்கள் வாழ்க்கை முறை, உணவுகள், பழக்க வழக்கம், ஆடைகள் உள்ளிட்டவற்றை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :
  கடந்த சில ஆண்டுகளாக கடும் மழை, புயல், எரிக்கும் வெயில் உள்ளிட்ட இந்தியாவில் பருவ நிலை மாற்றங்கள் தீவிரமாக இருந்து வருகிறது. கடலின் ஆழத்தில் இருந்து ஆழமான நீரை மேலே கொண்டு வரும் பூமத்திய ரேகை, காற்று வலுவாக மாறும் போது, லா நினா உருவாகிறது. இது உலக அளவில் தீவிரமான வானிலை மாற்றத்தை ஏற்படுத்தலாம். இதன் விளைவுகள் இந்தியாவில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

  வரும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் இது வரை இல்லாத அளவுக்கு வெப்பநிலை குறைந்து கடுமையான குளிர் காலமாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வானிலை ஆய்வு, ஆசியாவில் எவ்வளவு மின்சாரம் தேவைப்படும் என்று கணிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. “லா நினாவால் வடகிழக்கு ஆசியா முழுக்கவே குளிர்காலத்தில் அதிக மின்சாரத் தேவை இருக்கும், இதனால் மின்பற்றாக்குறை ஏற்படும்” என்று DTN வானிலை ஆய்வு மையத்தின் துணைத் தலைவர் ரென்னி வான்டேவேஜ் தெரிவித்துள்ளார்.

  ஆய்வு பற்றிய அறிக்கைகளின் படி, ஏற்கனவே ஹிமாச்சல பிரதேசத்தில் பல இடங்களில் வெப்பநிலை மிகவும் குளிர்ச்சியாக மாறியுள்ளது. இந்த ஆண்டு வட மாநிலங்களில் வழக்கத்தை விட குளிர் காலம் முன்னதாகவே தொடங்கிவிட்டது என்றும், சில இடங்களில் மைனஸ் ஐந்து டிகிரி செல்சியஸ் என்ற அளவுக்கு வெப்பநிலை பதிவாகி இருப்பதாகவும் சிம்லாவின் IMD மையம் தெரிவித்துள்ளது.

  Also Read ; எப்போது ஆட்சி கவிழும் என்ற பயத்திலேயே ராஜஸ்தான் அரசு செயல்படுகிறது - அமித்ஷா
   கடுமையான குளிர்காலத்தை எதிர்கொள்வது பற்றிய உதவிக்குறிப்புகள் :

  முதலில் குளிர்காலத்திற்காக ஏற்றவாறு உங்கள் வாழ்க்கை முறை, உணவுகள், பழக்க வழக்கம், ஆடைகள் உள்ளிட்டவற்றை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். அதிக குளிர் மற்றும் மைனஸ் டிகிரி டெம்பரேச்சரால் உடலின் வெப்ப நிலை குறைந்து உடல் செயல்பாடுகளை பாதிக்கும் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது.

  எனவே, உடல் சரியான வெப்பநிலையில் இருக்க வேண்டும். குளிர் காற்று எக்ஸ்போஷர் உடலின் வெப்பத்தை உடனடியாக குறைத்து விடும் தன்மை கொண்டதால், பெரும்பாலும் வெளிப்புறத்தில் செல்வதை தவிர்த்திடுங்கள். குளிர்காலத்துக்கு ஏற்றவாறு ஆடைகளை அணிவது உடலின் வெப்பத்தை தக்கவைக்க உதவும்.

  அதே போல, ரத்த ஓட்டத்தை தடைபடும் அளவுக்கு இறுக்கமாக அல்லது பல லேயர் ஆடைகளை அணிய வேண்டாம். கைகள், கால்கள், காத்து, முகம் ஆகியவற்றை மூடும் அளவுக்கு ஆடைகளைத் தளர்வாக அணிந்து கொள்ளுங்கள். கம்பளி ஆடைகள், ஜாக்கெட், கோட், கையுறைகளை முன்கூட்டியே தயாராக வைத்துக் கொள்வது பயனளிக்கும்.

  Also Read : இந்தியாவில் நோய் எதிர்ப்பு திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு கூடுதல் தடுப்பூசி?

  கோடை காலத்தை விட குளிர்காலத்தில் மிகவும் விரைவாக ஆற்றலை இழக்கும் அபாயம் உள்ளது. நீங்கள் எனர்ஜியுடன் இருந்தால் உங்கள் உடல் தசைகள் வெப்பமாக இருக்கும். எனவே, குளிரான சூழல் இருந்தாலும், சுறுசுறுப்பாக செயல்படுங்கள். சோம்பேறித்தனமாக இருப்பது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

  எல்லாவற்றையும் முக்கியமானது நீங்கள் சாப்பிடும் உணவுகள். குளிர் காலத்தில் சூடான பானங்களை, அதிக கலோரி கொண்ட உணவுகளை சாப்பிடலாம். அதிகமான காய்கறிகளை உணவில் சேர்த்து ஊட்டச்சத்துக் குறைபாட்டை தவிர்க்கலாம். குடிக்கும் நீரை கொதிக்க வைத்து, சூடாகவோ அல்லது வெதுவெதுப்பாகவோ அருந்துவதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். தேவையில்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
  Published by:Vijay R
  First published:

  Tags: Winter

  அடுத்த செய்தி