பேறுகால (பிரசவ கால) இறப்பு விகிதத்தை 2030-ஆம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் குழந்தை பிறப்புக்கு 70 பேர் என்ற நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை எட்டும் நிலையில் இந்தியா உள்ளது. இந்த நீடித்த இலக்கை ஏற்கனவே தமிழகம் எட்டியுள்ளது.
இது தொடர்பாக இந்திய தலைமைப் பதிவாளர் வெளியிட்டுள்ள பேறுகால இறப்பு விகிதம் குறித்த சிறப்பு செய்திக் குறிப்பின்படி, குறிப்பிடத்தக்க சாதனையாக, இந்தியாவில் பேறுகால இறப்பு விகிதம் 10 புள்ளிகள் குறைந்துள்ளது. 2016-18-ல் 113-ஆக இருந்த இந்த விகிதம் 2017-19-ல் 103ஆக குறைந்துள்ளது. இது 8.8% வீழ்ச்சியாகும்.
பேறுகால இறப்பு விகிதத்தைப் பொறுத்தவரை இந்தியாவில் முன்னேற்றகரமான முறையில், 2014-16-ல் 130, 2015-17-ல் 122, 2016-18-ல் 113 மற்றும் 2017-19-ல் 103 என குறைந்து வருகிறது. கேரளா, மகாராஷ்ட்ரா மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலங்களில் குறிப்பிடத்தக்க அளவாக 15 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்ட்ரா, குஜராத் மற்றும் ஜார்க்கண்ட்ஆகிய 7 மாநிலங்கள் நீடித்த வளர்ச்சிக்கான இலக்கை ஏற்கனவே எட்டிவிட்டன. குறிப்பாக தமிழ்நாட்டில், பேறுகால இறப்பு விகிதம், ஒரு லட்சம் பிரசவங்களுக்கு 58 என்ற அளவில் குறைந்துள்ளது.
இதையும் படிங்க: ஹிஜாப் அணிவது இஸ்லாமின் அடிப்படை நடைமுறை இல்லை.. தடையை உறுதி செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு
பி்ரசவகால இறப்பு விகிதங்களைக் குறைக்க ஏற்கனவே, பிரதமரின் பேறுகால பாதுகாப்புத் திட்டம், பிரதமரின் மாத்ரு வந்தனா திட்டம், ரத்த சோகை இல்லாத இந்தியா, ஜனனி சுரக்சா யோஜனா, ஊட்டச்சத்து இயக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Central government, Pregnancy, Pregnancy Risks, Tamilnadu