Home /News /national /

இந்தியாவில் 2021-ல் மட்டும் 49 யானைகளின் உயிரை சூறையாடிய வேட்டைக்காரர்கள்.. 77 பேர் கைது: ஆர்டிஐ விளக்கம்!

இந்தியாவில் 2021-ல் மட்டும் 49 யானைகளின் உயிரை சூறையாடிய வேட்டைக்காரர்கள்.. 77 பேர் கைது: ஆர்டிஐ விளக்கம்!

யானை

யானை

ப்ராஜெக்ட் எலிஃபென்ட்டின் 2017 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான காட்டு ஆசிய யானைகள் இருப்பதாக தெரிவித்துள்ளது. அதாவது, சுமார் 30,000 யானைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 49 யானைகள் வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சட்ட அமலாக்க அமைப்புகள் சுமார் 77 குற்றவாளிகளை கைது செய்துள்ளதாக ஆர்டிஐ-யின் கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது.

அதிகபட்சமாக அசாம் மாநிலத்தில் சுமார் 9 யானைகளும், மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தலா 8 யானைகளும், கர்நாடகா மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் தலா 3 யானைகளும் வேட்டையாடுபவர்களால் கொல்லப்பட்டுள்ளதாக வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டுப் பணியகம் (WCCB) தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து கேரளா மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களிலும் தலா இரண்டு யானைகள் கொல்லப்பட்டதாக தலா இரண்டு வழக்குகளும், ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம், பீகார், மேகாலயா, சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு வழக்கும் பதிவாகியுள்ளன.

ALSO READ |  பூமியை நெருங்கி வரும் சிறிய கோள்.. நாசா எச்சரிக்கை!

முன்னதாக நொய்டாவைச் சேர்ந்த சமூக மற்றும் விலங்கு உரிமை ஆர்வலர் ரஞ்சன் தோமர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் (MoEFF) கீழ் செயல்படும் WCCB-யிடம் தகவலைக் கேட்டிருந்தார். அதில், யானைகள் கொல்லப்பட்டது தொடர்பான வழக்குகளின் அடிப்படையில், அதிகபட்சமாக தமிழகத்தில் 17 பேரும், அசாமில் 15 பேரும், ஒடிசாவில் 13 பேரும், மேற்கு வங்கத்தில் 11 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.



கேரளாவில் 5 பேரும், உத்தரகாண்ட் மற்றும் பீகாரில் தலா 4 பேரும், மகாராஷ்டிராவில் 3 பேரும், மேகாலயா மற்றும் ராஜஸ்தானில் தலா 2 பேரும், கர்நாடகாவில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மாபெரும் விலங்கினம் வேட்டையாடும் நிலைமை குறித்து கவலை தெரிவித்த ரஞ்சன், யானைகளின் இயற்கையான வாழ்விடங்களில் அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாகவும், அது குறித்த விழிப்புணர்வை அரசாங்கம் ஏற்படுத்தி வருகிறது என நம்புவதாகவும் கூறியுள்ளார்.

ALSO READ |  காதலியின் தாய்க்கு கிட்னி தானம் அளித்தும் காதலி ஏமாற்றிவிட்டாள் - புலம்பும் காதலன்

இதுகுறித்து பேசிய அவர், "காடுகளை விரிவுபடுத்துவதிலும், பசுமையான நிலப்பரப்புகளை உருவாக்குவதிலும் யானைகள் முக்கியப் பங்காற்றுகின்றன. இவைகள் சராசரியாக ஒரு நாளைக்கு பல கிலோமீட்டர்கள் நடக்கின்றன. காடுகளில் இலைகள் மற்றும் பழங்களை சாப்பிடுகின்றன. நடைப்பயணத்தின் போது, ​​அவை தாவரங்கள் மற்றும் மரங்களின் விதைகளைக் கொண்ட சாணத்தை விட்டுச் செல்கின்றன. இது விதைகளின் விநியோக செயல்முறையாகும். இது பச்சை நிறத்தை அதாவது அடர்ந்த வனத்தை விரிவுபடுத்த உதவுகிறது," என்று குறிப்பிட்டுள்ளார்.



ப்ராஜெக்ட் எலிஃபென்ட்டின் 2017 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான காட்டு ஆசிய யானைகள் இருப்பதாக தெரிவித்துள்ளது. அதாவது, சுமார் 30,000 யானைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது இந்த உயிரினங்களின் உலக மக்கள்தொகையில் 60 சதவீதம் ஆகும்.

ALSO READ |  ஒரு தேசம் ஒரே தேர்தல், ஒரு நாடு ஒரே வாக்காளர் பட்டியல் - பிரதமர் நரேந்திர மோடி திட்டம்

இருப்பினும், மனித-விலங்கு மோதல், இயற்கை வாழ்விட இழப்பு மற்றும் தந்தம் அல்லது இறைச்சிக்காக இனங்களைக் கொல்லும் வேட்டைக்காரர்கள் போன்ற காரணங்களால் பல ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான யானைகள் கொல்லப்பட்டு வருகின்றன.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Elephant, Elephant struggles, Wilf animal Elephant

அடுத்த செய்தி