ஹோம் /நியூஸ் /இந்தியா /

நாட்டின் மிக நீளமான ரயில் சேவை 'விவேக் எக்ஸ்பிரஸ்' இனி வாரம் இரு முறை இயங்கும்

நாட்டின் மிக நீளமான ரயில் சேவை 'விவேக் எக்ஸ்பிரஸ்' இனி வாரம் இரு முறை இயங்கும்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

நாட்டின் மிக நீளமான ரயிலான விவேக் எக்ஸ்பிரஸ் இனி வாரத்திற்கு இரண்டு நாள்கள் இயங்கும் என வடகிழக்கு எல்லை ரயில்வே தெரிவித்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Delhi, India

  இந்தியாவை இணைக்கும் முக்கிய போக்குவரத்து சக்தியாக திகழ்வது இந்திய ரயில்வே. நாட்டின் பல மாநிலங்களையும் இணைக்கும் இந்திய ரயில்வேயானது பொதுமக்கள் பயணத்திற்கு பிரதான ஆற்றலாக உள்ளது. அப்படித்தான் நாட்டின் மிக நீளமான ரயில் பாதையில் செல்லும் ரயில் என்ற பெருமையை விவேக் எக்ஸ்பிரஸ் பெற்றுள்ளது.

  இந்தியாவின் வடகிழக்கில் அமைந்துள்ள திப்ருகர் ரயில் நிலையத்திற்கும், நாட்டின் தென்கோடி முனையான கன்னியாகுமரி ரயில் நிலையத்திற்கும் இடையிலான சுமார் 4,247 கிமீ என்ற மிக நீண்ட தொலைவை விவேக் எக்ஸ்பிரஸ் சேவை கடந்து பயணிக்கிறது.

  இந்த விவேக் எக்ஸ்பிரஸ் 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டு, 11 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இதுவரை வாரத்திற்கு ஒரு நாள் மட்டும் இயங்கி வந்த இந்த விவேக் எக்ஸ்பிரஸ் இனி வாரத்திற்கு இரண்டு நாள்கள் இயங்கும் என வடகிழக்கு எல்லை ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி, ரெயில் எண். 15906 திப்ருகர் - கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ் சனிக்கிழமை மட்டும் இயங்கி வந்த நிலையில், இனி செவ்வாய்க்கிழமையும் கூடுதலாக இயக்கப்படவுள்ளது.

  ரெயில் எண். 1590 கன்னியாகுமரி- திப்ருகர் விவேக் எக்ஸ்பிரஸ் வியாழக்கிழமை மட்டும் இயக்கி வந்த நிலையில் இனி ஞாயிற்றுக்கிழமையும் இயக்கப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதையும் படிங்க: ரூ.640 கோடி மதிப்பில் பசுமை விமான நிலையம் - அருணாசலப் பிரதேசத்தில் திறந்து வைத்தார் பிரதமர் மோடி

  விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலானது தனது ஒரு பயணத்தில் மொத்தம் 9 மாநிலங்களைக் கடக்கிறது. 58 ஸ்டாப்களை கொண்ட இந்த ரயில் அசாம், நாகாலாந்து, பீகார், மேற்குவங்கம், ஜார்கண்ட், ஒடிசா, ஆந்திரப்பிரதேசம், கேரளா மற்றும் தமிழ்நாடு வழியே பயணிக்கிறது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Indian Railways, Railway, Train