நாட்டின் தினசரி கோவிட்-19 பாதிப்பு நிலவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் 3 ஆயிரத்து 688 பேருக்கு புதிதாக கோவிட் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 75 ஆயிரத்து 864ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கோவிட் சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கையும் 18 ஆயிரத்து 684ஆக உயர்ந்துள்ளது.புதிதாக 2 ஆயிரத்து 755 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் 50 உயிரிழப்புகள் பதிவாகியுள்ள நிலையில், நாட்டின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 23 ஆயிரத்து 803ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் 4 லட்சத்து 96 ஆயிரத்து 640 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
மூன்றாவது கோவிட் அலையான ஒமைக்ரான் அலையில் இருந்து இந்தியா சமீபத்தில் மீண்டதை அடுத்து, கட்டுப்பாடுகளுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டன. நாடு மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கும் வேளையில், கடந்த சில நாள்களாக மீண்டும் தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஆயிரத்துக்கும் குறைவாக இருந்த தினசரி பாதிப்பு தற்போது நான்காயிரத்தை நெருங்கியுள்ளது. நேற்றை விட இன்று தினசரி பாதிப்பு எண்ணிக்கையில் 311 அதிகம் காணப்படுகிறது.
இதையடுத்து பல்வேறு மாநிலங்கள் மீண்டும் முகக் கவசத்தை கட்டாயம் என அறிவித்துள்ளன. மேலும், தடுப்பூசித் திட்டத்தை துரிதப்படுத்த மத்திய மாநில அரசுகள் தொடர் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன. குறிப்பாக, 15 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ்களும் செலுத்த சுகாதாரத்துறை அமைச்சகம் முனைப்பு காட்டிவருகிறது.
அதேவேளை, புதிய அலையில் பாதிப்பை சந்தித்தவர்களில் 30 சதவீதத்தினர் பூஸ்டர் டோஸ் செலுத்தியுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. பூஸ்டர் டோஸ் செலுத்தினாலும் பாதிப்பு ஏற்படும் என்றாலும், தடுப்பூசி செலுத்தியதன் காரணமாக நோய்யின் தீவரத்தன்மையில் இருந்து பாதிக்கப்பட்டவர்கள் காக்கப்படுவார்கள் என மருத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:
எனது கடைசி காலத்தை உங்களுக்காக அர்ப்பணிக்கிறேன் - ரத்தன் டாடா உருக்கமான பேச்சின் பின்னணி
COWIN இணைதளத்தின் புள்ளி விவரப்படி, நாடு முழுவதும் இதுவரை 100 கோடியே 80 லட்சத்து 76 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இதில் 100.
30 கோடிக்கும் மேற்பட்டோருக்கு ஒரு டோஸ் தடுப்பூசியும், 85.83 கோடிக்கும் மேற்பட்டோருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. 2.66 கோடி பேர் முன்னெச்சரிக்கை பூஸ்டர் டோஸ் செலுத்தியுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 22 லட்சத்து 58 ஆயிரத்து 059 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.