Home /News /national /

இந்தியாவில் அடுத்த 8 ஆண்டுகளில் விமான நிலையங்களின் எண்ணிக்கை 220ஆக உயரும் - மத்திய அமைச்சர் தகவல்.!

இந்தியாவில் அடுத்த 8 ஆண்டுகளில் விமான நிலையங்களின் எண்ணிக்கை 220ஆக உயரும் - மத்திய அமைச்சர் தகவல்.!

Airport

Airport

Airports in India | கடந்த 2013ஆம் ஆண்டில் இந்தியாவில் இயக்கப்பட்ட மொத்த விமானங்களின் எண்ணிக்கை 400 ஆகும். கடந்த 2021 - 22 காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 700ஆக அதிகரித்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
2027ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 1,200 விமானங்கள் இயங்கும் என்றும், 40 கோடி விமானப் பயணிகள் இருப்பார்கள் என்றும் மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். 2030ஆம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள விமான நிலையங்களின் எண்ணிக்கையை 220ஆக உயர்த்துவதே அரசின் இலக்கு என்றும் அவர் கூறினார்.

பயணிகளுக்கான வசதிகள், விமானங்கள் மற்றும் விமான நிலையங்கள் ஆகியவற்றின் வளர்ச்சி தொடர்பிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.

கடந்த 2013ஆம் ஆண்டில் இந்தியாவில் இயக்கப்பட்ட மொத்த விமானங்களின் எண்ணிக்கை 400 ஆகும். கடந்த 2021 - 22 காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 700ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் 15 சதவீத அடிப்படையில் 100 முதல் 110 விமானங்களை கூடுதலாக சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்.

முன்னதாக, இந்தியாவில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஆகாஸா ஏர் என்ற விமானப் போக்குவரத்து நிறுவனத்தின் முதலாவது சேவையை காணொலி காட்சி வாயிலாக சிந்தியா தொடங்கி வைத்தார். மும்பையில் இருந்து அஹமதாபாத் நகருக்கு முதலாவது சேவை இயக்கப்பட்டது. இதை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அமைச்சர் சிந்தியா அளித்த பேட்டியில்..



 

இந்தியாவில் புதிதாக விமானப் போக்குவரத்து நிறுவனம் தொடங்கப்பட்டு 8 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. கடந்த 2 ஆண்டுகளாக, ஒரு விமானப் போக்குவரத்து நிறுவனத்தை இயக்குவது எந்த அளவுக்கு சிரமம் மிகுந்தது என்பதை நாம் அறிவோம். நிர்வாக ரீதியாக பல்வேறு பிரச்சினைகளை அவர்கள் எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, கடந்த 20 ஆண்டுகளில் 7 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

Also Read : இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை ; வரலாறு சொல்லும் பல அரிய உண்மைகள்..

ஆகாஸா விமான சேவை தொடங்கப்படுவது என்பது இந்திய விமானப் போக்குவரத்து சேவையில் மிக முக்கியமான நாளாகும். கொரோனா பெருந்தொற்று காலம் காரணமாக விமானப் போக்குவரத்து துறை என்பது கடுமையாகப் பாதிக்கப்பட்டது. ஆகாஸா விமான சேவை தொடங்கப்படுவதன் மூலமாக விமானப் போக்குவரத்து சேவை வளர்ச்சி அடைவதற்கும், ஆரோக்கியமான மார்க்கெட் உருவாகுவதற்குமான அறிகுறிகள் தென்படுகின்றன.



உள்நாட்டு விமானப் போக்குவரத்து கட்டமைப்பை பலம் மிகுந்ததாக மாற்றுவதற்கான நாள் வெகு தொலைவில் இல்லை. இந்தியாவின் போக்குவரத்து துறையில், விமானப் போக்குவரத்து மிக முக்கியப் பங்காற்றப் போகிறது.

Also Read : இனி அரசு மானியம், பலன்களை பெற ஆதார் கட்டாயம்..UIDAI சுற்றறிக்கை

2013 - 14 காலகட்டத்தில் 6 கோடியாக இருந்த விமானப் பயணிகளின் எண்ணிக்கை 250 சதவீதம் அதிகரித்து 2019 - 20 நிதியாண்டில் 20 கோடியாக உயர்ந்தது. 2027ஆம் ஆண்டுக்குள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கையை 40 கோடியாக உயர்த்துவதற்கு இலக்கு நிர்ணயம் செய்துள்ளோம் என்றார் அவர்.
Published by:Selvi M
First published:

Tags: Airport, India

அடுத்த செய்தி