''பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் உலகின் தலைநகர் இந்தியா'' ராகுல் காந்தி காட்டம்

Rahul Gandhi | Unnao | பாஜக எம்எல்ஏ பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளதாகவும், ஆனால் பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட பேச மறுப்பதாகவும் குற்றம்சாட்டினார்

''பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் உலகின் தலைநகர் இந்தியா'' ராகுல் காந்தி காட்டம்
ராகுல்காந்தி
  • Share this:
பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் உலகின் தலைநகராக இந்தியா உள்ளதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

உத்தர பிரதேசத்தின் உன்னாவ் பகுதியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, தீயிட்டு எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைக் கண்டித்து உத்தரபிரதேச சட்டப்பேரவை முன்பு, முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது இது கறுப்பு நாள் என்றும், பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கத் தவறிய யோகி ஆதித்யநாத் அரசு அகற்றப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். உன்னாவ் நகரில் பாலியல் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


உன்னாவ் பகுதியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டுக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி, குற்றவாளிகளுக்கு பாஜகவுடன் தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளதாகவும், அதனாலேயே அவர்கள் பாதுகாக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.

இதனிடையே, கேரள மாநிலம் வயநாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, உலகின் பாலியல் வன்கொடுமைகளின் தலைநகராக இந்தியா மாறிவிட்டதாக குற்றம்சாட்டினார். பாஜக எம்எல்ஏ பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளதாகவும், ஆனால் பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட பேச மறுப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

உன்னாவ் பெண் டெல்லியில் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர், தனது 6 வயது மகள் மீது பெட்ரோலை ஊற்றியதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் பட்டேலை, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாயாவதி, குற்றவாளிகளுக்கு சட்டம் குறித்த எந்த அச்சமும் இல்லை என்றும், பாலியல் வன்கொடுமைகள் வழக்கமான நிகழ்வாகி விட்டதாகவும் வேதனை தெரிவித்தார். ஆளுநரே பெண்ணாக இருப்பதால், உத்தர பிரதேச முதலமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரிகளை அழைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாயாவதி வலியுறுத்தினார்.

 
First published: December 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading