ஹோம் /நியூஸ் /இந்தியா /

“இந்தியாவுக்கு ஆபத்து.. போர் வந்தால் சீனாவும் பாகிஸ்தானும் சேர்ந்து தாக்கும்..” ராகுல் பரபரப்பு பேச்சு

“இந்தியாவுக்கு ஆபத்து.. போர் வந்தால் சீனாவும் பாகிஸ்தானும் சேர்ந்து தாக்கும்..” ராகுல் பரபரப்பு பேச்சு

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

எந்நேரமும் போர்த் தாக்குதலுக்கு ஆளாகக் கூடிய ஒரு நாடாக இந்தியா உள்ளது - ராகுல் காந்தி

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

போர் வந்தால் இந்தியாவுக்கு எதிராக சீனாவும் பாகிஸ்தானும் ஓர் அணியில் கை கோர்க்கும் என ராகுல் காந்தி கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவும் பாகிஸ்தானும் ஒன்றிணைந்து இந்தியாவைத் தாக்க வாய்ப்புள்ளதாக ராகுல் காந்தி எச்சரித்துள்ளார். இந்திய ஒற்றுமை பயணம் எனும் பெயரில் நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி ராஜஸ்தானைத் தொடர்ந்து டெல்லியில் பயணம் மேற்கொண்டார்.

அப்போது முன்னாள் ராணுவ வீரர்களுடன் ராகுல் காந்தி உரையாடல் நிகழ்த்தினார். அதில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசிய ராகுல், சீனாவும் பாகிஸ்தானும் ஒன்றிணைந்து இந்தியாவைத் தாக்க வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டார்.

எந்நேரமும் போர்த் தாக்குதலுக்கு ஆளாகக் கூடிய ஒரு நாடாக இந்தியா உள்ளதாக எச்சரித்த அவர் சீனா, பாகிஸ்தான் என இரண்டு எதிரிகள் இருந்து வந்த நிலையில் தற்போது இரு நாடுகளும் ஒன்று சேர்ந்து விட்டதாகவும் கூறினார்.

போர் வந்தால் இருநாடுகளும் ராணுவ ரீதியில் மட்டுமில்லாது பொருளாதார ரீதியிலும் ஒன்றிணைந்து செயல்பட வாய்ப்புள்ளதாகக் கூறிய ராகுல், அதனால்தான் தீவிர நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசிடம்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

First published:

Tags: Army, India vs China, India vs Pakistan, Rahul gandhi