கோவிட்-19 தொற்றுநோய் பாதிப்பு தற்போது வெகுவாக குறைந்துள்ளது என்றாலும், இது பல பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டது தான் சென்றுள்ளது. இதுவரை 2022-இல், ரஷ்யா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் அதிக எண்ணிக்கையிலான கோடீஸ்வரர்களை இழந்த முதல் மூன்று நாடுகளில் உள்ளன என்று சமீபத்திய ஆய்வுகள் கூறியுள்ளன. இந்த நாடுகள் முறையே 15,000, 10,000 மற்றும் 8,000 கோடீஸ்வரர்களை இழந்துள்ளன என்று உலகளாவிய ஆலோசகர் ஹென்லியின் அறிக்கையின்படி தெரிவித்துள்ளார்.
இந்தியாவைப் பொறுத்தவரை, இது தற்போது கவலை அளிக்க கூடிய ஒன்றாக இல்லை. ஏனெனில், இந்தியாவில் பல புதிய மில்லியனர்கள் அதிக எண்ணிக்கையில் உருவாகின்றனர். வெளிநாட்டில் வசிக்கும் வசதியுள்ள தனிநபர்கள் இந்தியாவுக்குத் திரும்பும் போக்கும் அதிகமாகி உள்ளது. நாட்டின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டவுடன், செல்வந்தர்கள் அதிக எண்ணிக்கையில் குறைகின்றனர் என்று கூறுகின்றனர்.
2031 ஆம் ஆண்டளவில் இந்தியாவின் அதிக நிகர மதிப்புள்ள தனிநபர் மக்கள் தொகை 80 சதவீதம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்த காலகட்டத்தில் உலகின் மிக வேகமாக வளரும் செல்வச் சந்தைகளில் ஒன்றாக மாறும். மேலும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற பல முக்கிய சந்தைகளால் சீனாவின் ஹுவாய் 5ஜி சேவை தடை செய்யப்பட்டது, அந்த நாட்டிற்கு ஒரு பெரிய பின்னடைவாக உள்ளது.
ஹுவாய் நிறுவனம் சீனாவின் ஹைடெக் துறையின் மகுடமாக உள்ளது. உலகளாவிய தலையீடு இல்லாவிட்டால், உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமாக இது உருவெடுத்திருக்கலாம். ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவுடனான சீனாவின் உறவு மோசமடைந்து வருவதும், ஒரு நீண்டகாலத்துக்கு கவலை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது" என்று ஹென்லியின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஹாங்காங் எஸ்ஏஆர், உக்ரைன், பிரேசில், மெக்சிகோ, யு.கே, சவுதி அரேபியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் 2022 ஆம் ஆண்டில் கோடீஸ்வரர்களின் நிகர வெளியேற்றம் அதிகமாகி உள்ளது என்று இந்த அறிக்கையில் கூறியுள்ளார். அதிக நிகர மதிப்புள்ள தனிநபர் இடம்பெயர்வு புள்ளிவிவரங்கள் என்பது ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் ஆரோக்கியத்திற்கு ஒரு சிறந்த அளவுகோலாகும். கடந்த தசாப்தத்தில் கோடீஸ்வரர்களின் இடம்பெயர்வு அதிகரித்து வருகிறது, ஆனால் கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக 2020-இல் இது குறைந்துள்ளது, மேலும் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டிற்கான ஒவ்வொரு நாடு சார்ந்த தனி புள்ளிவிவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இது கொரோனா கால லாக்டவுன் காரணத்தால் கண்டறிய இயலவில்லை.
2022 ஆம் ஆண்டின் இறுதியில், உக்ரைனின் அதிக நிகர மதிப்புள்ள நபர்களில் 42 சதவீதம் பேர் நாட்டை விட்டு வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பெரும்பாலும் ரஷ்யாவின் படையெடுப்பு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 2022 ஆம் ஆண்டின் இந்த காலகட்டத்தில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இஸ்ரேல், அமெரிக்கா, போர்ச்சுகல், கனடா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கிரீஸ் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோடீஸ்வரர்களின் வருகை அதிகமாக கூடும்.
கடந்த இரண்டு தசாப்தங்களில் கிட்டத்தட்ட 80,000 மில்லியனர்கள் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 2022-இல் 3,500 பேர் குடியேறி உள்ளனர். மேலும், அதிக எண்ணிக்கையிலான மில்லியனர்கள் மால்டா, மொரிஷியஸ் மற்றும் மொனாக்கோ ஆகிய மூன்று தேசங்களுக்கு செல்ல வாய்ப்புள்ளது. 2022 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிக நிகர மதிப்புள்ள தனிநபர்களின் மிகப்பெரிய நிகர வரவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏறக்குறைய 4,000 மில்லியனர்கள் இந்த ஆண்டு எமிரேட்ஸுக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பெரும்பாலானவர்கள் ரஷ்யா, இந்தியா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.
குறிப்பிடத்தக்க வகையில், சிங்கப்பூர் ஆசியாவின் சிறந்த செல்வ மேலாண்மை மையமாக வளர்ந்து வருகிறது, இது எதிர்காலத்தில் பல வசதி படைத்த நபர்களை அங்கு இடம்பெயரச் செய்யும் என்று தெரிய வந்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.