ஹோம் /நியூஸ் /இந்தியா /

இந்தியா எப்போதும் போருக்குத் தயார்தான் - சீன அதிபரின் கருத்தைத் தொடர்ந்து அமித் ஷா விளக்கம்

இந்தியா எப்போதும் போருக்குத் தயார்தான் - சீன அதிபரின் கருத்தைத் தொடர்ந்து அமித் ஷா விளக்கம்

அமித்ஷா

அமித்ஷா

இந்தியப் பகுதியின் ஒரு இஞ்ச் இடத்தைக் கூட சீனாவுக்கு இந்தியா விட்டுத் தராது. இந்தியாவும் எப்போதும் போருக்குத் தயார்தான் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நியூஸ் 18 குழும தலைமை செய்தி ஆசிரியர் ராகுல் ஜோஷிக்கு பேட்டியளித்தார். இந்தப் பேட்டியில் சீன விவகாரம், பீகார் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விளக்கமளித்தார். அப்போது பேசிய அவர், ‘இந்தியப் பகுதியின் ஒரு இஞ்ச் இடத்தைக் கூட சீனாவுக்கு இந்தியா விட்டுத் தராது. எல்லா நாடுகளும் போருக்குத் தயார்தான். எந்த வகையில் வரும் எதிர்ப்புக்கு பதிலளிப்பதற்காக ராணுவத்தை பராமரித்துவருவதற்கான காரணம் அதுதான். எதும் குறிப்பிட்டவரின் கருத்துக்கு இதை நான் பதிலாக கூறவில்லை. ஆனால், இந்தியாவின் பாதுகாப்புப் படை எப்போதும் தயார்தான். இரு நாட்டு ராணுவங்களும் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டுதான் இருக்கின்றன.

அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகளுக்கான வாய்ப்புகளும் திறந்துதான் உள்ளன. இந்த நாட்டின் உள்துறை அமைச்சராக இந்த விவகாரத்தில் கருத்து தெரிவிப்பது தொடர்புடையதாக இருக்காது என்று நினைக்கிறேன். ஆனால், பிரதமர் மோடியின் வார்த்தைகளை திரும்பக் கூறுகிறேன். நாங்கள் பாதுகாவலர்ளாக இருக்கிறோம். நம்முடைய பகுதியின் ஒரு இன்ச் நிலத்தைக் கூட யாராலும் திருட முடியாது. திபெத், தைவான் விவகாரம் குறித்து விவாதிக்க தற்போது சரியான நேரமில்லை. அது மிகவும் சிக்கலான விஷயம்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் இந்தியாவின் நிலைப்பாட்டை நாடாளுமன்றத்தில் தெளிவாக விளக்கியுள்ளனர். அது போதும் என்று நினைக்கிறேன். சீனாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றுகொண்டிருக்கிறது.

இந்தியாவுக்கு உலக நாடுகளின் ஆதரவு இருக்கிறது. நம்முடைய நோக்கம் உயர்ந்தது. வலிமையானது. இந்த நாட்டின் 130 கோடி மக்களும் யார் முன்னாடியும் தலைகுனிய மாட்டோம்’ என்று தெரிவித்தார்.

இந்தியா- சீனாவுக்கு இடையை எல்லைப் பிரச்னை தொடர்பாக கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக பிரச்னை நீடித்துவருகிறது. இந்தநிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் ராணுவ வீரர்கள் முன்னிலையில் பேசிய சீன அதிபர் ஷி ஜின்பிங், போருக்குத் தயாராக இருங்கள்’ என்று தெரிவித்திருந்தார். அதனால், இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Amit Shah, Amit Shah To News 18, India vs China