அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு சுங்க வரியை உயர்த்தியது இந்தியா!

இதில், சமாதானம் அடையாத அமெரிக்கா, இந்தியாவிற்கு வழங்கி வந்த சிறப்பு வர்த்தக அந்தஸ்தை கடந்த 5-ம் தேதி முதல் நிறுத்தியது.

news18
Updated: June 16, 2019, 6:24 PM IST
அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு சுங்க வரியை உயர்த்தியது இந்தியா!
மாதிரிப்படம்
news18
Updated: June 16, 2019, 6:24 PM IST
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 28 பொருட்களுக்கு இன்று முதல் இந்தியாவில் சுங்க வரி உயர்வு அமலுக்கு வருகிறது.

இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஸ்டீல், அலுமினியம் உள்ளிட்ட சில பொருட்களுக்கு, கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் அமெரிக்கா 25 விழுக்காடு சுங்க வரி விதித்தது. இதற்கு பதிலடி தரும் வகையில் இந்தியாவும், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 28 பொருட்கள் மீது வரி விதிப்பதாக அறிவித்தது.

இதற்கு அதிருப்தி தெரிவித்த அதிபர் டிரம்ப், அமெரிக்காவின் ஹார்லி டேவிட்சன் இரண்டு சக்கர வாகனங்கள் மீது இந்தியா 100 சதவீத வரியை வசூலிக்கிறது என குற்றம்சாட்டியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து இந்திய அரசும் வரி விதிப்பை தள்ளி வைத்து பேச்சுவார்த்தையில் இறங்கியது. ஒரு முடிவாக அமெரிக்க வாகனங்கள் மீதான இறக்குமதி வரியை 75 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக குறைத்தது. இதில், சமாதானம் அடையாத அமெரிக்கா, இந்தியாவிற்கு வழங்கி வந்த சிறப்பு வர்த்தக அந்தஸ்தை கடந்த 5-ம் தேதி முதல் நிறுத்தியது.

இதனால் ஓராண்டிற்கு பிறகு 28 அமெரிக்க பொருட்கள் மீதான சுங்க வரி உயர்வை இன்று முதல் இந்தியா அமல்படுத்தியுள்ளது. இதன்படி, வால்நட், கொண்டைகடலை, பயறு உள்ளிட்ட பொருட்களுக்கு கூடுதலாக 2 ஆயிரத்து 26 கோடி ரூபாய் வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Also see:

First published: June 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...