”இஸ்லாமியர்களின் சொர்க்கமாக இந்தியா உள்ளது” - இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்புக்கு மத்திய அமைச்சர் பதில்

மதச்சார்பின்மையும் மதநல்லிணக்கமும் இந்தியாவின், இந்தியர்களின் ’அரசியல் ஃபேஷன்’ அல்ல, அவை உணர்வு சார்ந்தது என்று அவர் தெரிவித்தார்.

”இஸ்லாமியர்களின் சொர்க்கமாக இந்தியா உள்ளது” - இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்புக்கு மத்திய அமைச்சர் பதில்
மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி.
  • Share this:
இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் சொர்க்கமாக இந்தியா திகழ்வதாக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார்.

இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு (OIC)  சார்பாக கடந்த ஏப்ரல் 19 அன்று அதன் மனித உரிமைப் பிரிவு அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தது. அதில், இந்தியாவில் வளர்ந்து வரும் இஸ்லாம் வெறுப்பு அலையை நிறுத்த இந்திய அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முஸ்லிம்கள் துன்புறுத்தப்படுவதாகவும், அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது. ஈரான், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 57 நாடுகளைக் கொண்ட கூட்டமைப்பு அது.

அந்த அமைப்பின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ள நக்வி, இஸ்லாமியர்களின் சமூக, பொருளாதார மற்றும் மத உரிமைகள் இந்தியாவில் பாதுகாக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். இஸ்லாமியர்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதாக எண்ணுவோர், இந்தியாவில் உள்ள களநிலவரத்தைப் பார்த்தால் தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்வார்கள் என்றும் கூறியுள்ளார்.


மேலும், இஸ்லாமியர்களின் சொர்க்கமாக இந்தியா உள்ளது என தெரிவித்த அவர், மதச்சார்பின்மையும் மதநல்லிணக்கமும் இந்தியாவின், இந்தியர்களின் ’அரசியல் ஃபேஷன்’ அல்ல, அவை உணர்வு சார்ந்தது என்று தெரிவித்தார்.

 

Also see:
First published: April 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading