வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இந்திய விண்வெளித்துறையில் அனுமதி: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

இந்தியாவில் ராக்கெட் ஏவுதளம் அமைத்து விண்வெளி ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வெளிநாடுகள் ஆர்வம் காட்டி வருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இந்திய விண்வெளித்துறையில் அனுமதி: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்
இஸ்ரோ தலைவர் சிவன்
  • Share this:
இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்கள் செயற்கைக் கோள்கள் மற்றும் ராக்கெட்டுகளை தயாரிக்கவும் அவற்றை விண்ணில் செலுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவரும் விண்வெளித்துறை செயலாளருமான சிவன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் புதிய விண்வெளி கொள்கையின்படி, இந்திய தனியார் நிறுவனங்களுக்கு மட்டுமல்லாது அந்நிய நேரடி முதலீட்டுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதன் மூலம் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களுடன் இணைந்தோ அல்லது தனியாகவோ இந்தியாவில் செயற்கைக்கோள்கள் மற்றும் ராக்கெட்டுகளை தயாரிக்க முடியும் என்றும், தரைக்கட்டுப்பாட்டு தளங்களை அமைத்துக் கொள்ள முடியும் என்றும் சிவன் தெரிவித்தார்.

மேலும் படிக்க...கொலம்பியாவில் 10 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு   

இந்தியாவின் பொறுமைக்கும் எல்லை உண்டு: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் எச்சரிக்கை


அவ்வாறு தயாரிப்பு பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள் இந்தியாவின் விண்வெளித்தளங்களை பயன்படுத்தி ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், இத்தகைய அனுமதிகளை வழங்கும்போது நாட்டின் பாதுகாப்பு கருத்தி்ல் கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
First published: October 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading