பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் இந்தியாவில் இதுவரை சுமார் 703 கிமீ நெடுஞ்சாலைகள் அமைப்பு - நிதின் கட்கரி தகவல்!

நெடுஞ்சாலை

சாலை அமைப்பதில் பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்துவதால் தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக்கின் தாக்கத்திலிருந்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்கிறது.

  • Share this:
தற்போது பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. ஆனால் இது எளிதில் மட்காது என்பதால் நிலத்திற்கு தீங்கு விளைவிக்கிறது. மேலும் பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பதால் எண்ணற்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனால் பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்வது தற்போது அதிகரித்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு சாலை கட்டுமானத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்த இருப்பதாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்தார்.

அப்போதிருந்து 11 மாநிலங்களில் சாலை அமைப்பதற்கு பிளாஸ்டிக் கழிவுகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில் இதுவரை 703 கிமீ தேசிய நெடுஞ்சாலைகள் கழிவு பிளாஸ்டிக்கை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளன என்று நாடாளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த தகவலின் படி, கழிவு பிளாஸ்டிக்கை அவ்வப்போது சூடான கலவையுடன் சேர்த்து தேசிய நெடுஞ்சாலைகளில் 50 கிமீ சுற்றளவில் 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகர்ப்புற பகுதியில் பிளாஸ்டிக் சாலை கட்டமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். இந்த பிளாஸ்டிக் சாலைகள் 6-8 சதவிகிதம் பிளாஸ்டிக்கையும், 92-94 சதவிகிதம் பிடுமினையும் கொண்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சாலை அமைப்பதில் பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்துவதால் தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக்கின் தாக்கத்திலிருந்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்கிறது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) அளித்த அறிக்கையின்படி, 2018-19 ஆம் ஆண்டில் இந்தியாவில் 3.3 மில்லியன் மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள் அதாவது ஒரு நாளைக்கு சுமார் 9,200 டன் (TPD) பிளாஸ்டிக் கழிவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. மொத்த நகராட்சி திடக்கழிவு உற்பத்தி 55-65 மில்லியன் டன் என்றும் அதில் பிளாஸ்டிக் கழிவுகள் மட்டும் ஏறக்குறைய 5-6 சதவிகிதம் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2021ம் ஆண்டு பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழுங்குபடுத்துவதற்காக, மத்திய சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகளை கொண்டு வந்தது, அதில் உற்பத்தி, இறக்குமதி, சேமிப்பு, விநியோகம், விற்பனை ஆகியவற்றை குறித்து. அதன்படி, ஜனவரி 1, 2022 முதல் பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்பட்டது. அதில் இருந்து பலூன்களுக்கான பிளாஸ்டிக் குச்சிகள், மிட்டாய் குச்சிகள், ஐஸ்கிரீம் குச்சிகள், பிளாஸ்டிக் கொடிகள் மற்றும் தெர்மோகால் ஆகியவை தயார் செய்யப்பட்டது.

கோவிட் -19 தொற்றுநோய் ஊரடங்கு காலத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் கட்டுமானம் கடுமையாக உயர்ந்துள்ளது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் கூறினார். அப்போது 2020-21ல், நெடுஞ்சாலைகள் கட்டுமான வேகம் ஒரு நாளைக்கு 36.5 கிமீ என்ற கணக்கில் அதிகரித்துள்ளது என்றார்.மேலும் இந்தியாவில் வெறும் 24 மணி நேரத்தில் 2.5 கிமீ நான்கு வழி கான்கிரீட் சாலை மற்றும் வெறும் 21 மணி நேரத்தில் 26 கிமீ ஒற்றை வழி பிட்யூமன் சாலையையும் உருவாக்கி உலக சாதனை படைத்தது என தெரிவித்துள்ளார். மேலும் இதில் தரக் கட்டுப்பாட்டை உறுதி செய்வதற்காக, IRC தரநிலைகள் மற்றும் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் (MoRTH) விவரக்குறிப்புகளின்படி கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

Also read... "சமைப்பதற்காக பிறக்கவில்லை" - இயற்கை விவசாயத்தில் சாதிக்கும் அரசுப்பள்ளி ஆசிரியை!

இதுவரை பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி 11 மாநிலங்களில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில், இது இரு மடங்காகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கி.மீ., சாலை அமைக்க, 9 டன், 'தார்' மற்றும் 1 டன் பிளாஸ்டிக் கழிவு பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம், 1 டன் தாரின் கொள்முதல் விலையான, 30 ஆயிரம் ரூபாய் சேமிக்கப்படுகிறது. முதல் முறையாக, 2018ல், ஹரியானாவின் குருகிராம் மாநகராட்சி, சாலைகள் அமைக்க பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Published by:Vinothini Aandisamy
First published: