ஹோம் /நியூஸ் /இந்தியா /

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்படுகிறது

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்படுகிறது

இஸ்ரோ

இஸ்ரோ

ஸ்கைரூட் நிறுவனத்தின் விக்ரம்-எஸ் ராக்கெட் 3 செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிறது. 2 இந்திய செயற்கைக்கோள்கள் மற்றும் 1 வெளிநாட்டு செயற்கைக்கோள் இன்று விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் இன்று ஸ்ரீஹரிகோட்டவில் இருந்து சரியாக 11.30மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.

    விண்வெளி ஆராய்ச்சி மற்றும் வணிக ரீதியாக ராக்கெட்டுகளை ஏவுவதில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வரும் இந்தியாவின் பொதுத்துறை நிறுவனம் ஆன இஸ்ரோ தற்போது தனியார் நிறுவனத்தின் ராக்கெட் ஒன்றை விண்ணில் செலுத்த உள்ளது.

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து இன்று காலை இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

    முதல் முதலாக தனியார் நிறுவனமான ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் என்ற நிறுவனத்தின் விக்ரம்- எஸ் என்ற ராக்கெட் இஸ்ரோவின் சார்பில் வின்னில் செலுத்தப்பட உள்ளது.

    இந்திய விண்வெளித் திட்டத்தின் நிறுவனர் மற்றும் புகழ்பெற்ற விஞ்ஞானி விக்ரம் சாராபாய் அவர்களை நினைவு கூறும் வகையில் ஸ்கைரூட்டின் ஏவுகணைகளுக்கு விக்ரம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

    2018-இல் நிறுவப்பட்ட இந்த ஸ்கைரூட் நிறுவனம் இந்தியாவில் முதல் முறையாக தனியாரால் உருவாக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜீனுடன் ஹைப்பர்கோலிக்-திரவ மற்றும் திட எரிபொருள் சார்ந்த ராக்கெட் என்ஜின்களை வடிவமைத்துள்ளது.

    இதையும் படிங்க: சபரிமலையில் இளம்பெண்களுக்கு அனுமதி இல்லை... அனுமதி உத்தரவை வாபஸ் பெற்றது கேரள அரசு..!

    விண்வெளியில் தனியார் துறை ஏவுதல் தொடங்கும் வகையில் இஸ்ரோ உடன் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த ராக்கெட் செலுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு பிரரம்ப் Prarambh – the beginning என்று பெயரிடப்பட்டுள்ளது.

    அதன்படி ஸ்கைரூட் நிறுவனத்தின் விக்ரம்-எஸ் ராக்கெட் 3 செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிறது. 2 இந்திய செயற்கைக்கோள்கள் மற்றும் 1 வெளிநாட்டு செயற்கைக்கோள் இன்று விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

    Published by:Murugesh M
    First published:

    Tags: ISRO