இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரான டாக்டர் அம்பேத்கரின் ராஜினாமா கடிதம் அரசு ஆவணங்களில் இருந்து காணாமல்போனதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிரஷாந்த் என்பவர் பிரதமர் அலுவலகம், அமைச்சரவை செயலர் மற்றும் குடியரசுத் தலைவரின் செயலாளரிடம் அம்பேத்கரின் ராஜினாமா கடிதம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் என்ன காரணத்திற்காக அம்பேத்கர் பதவியை ராஜினாமா செய்தார் என்ற விவரத்தையும் கேட்டிருந்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள அமைச்சரவை செயலகம், அம்பேத்கர் கடந்த 1951ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி ராஜினாமா செய்ததாகவும், வேறு எந்த தகவலும் தங்களிடம் இல்லை என்று தெரிவித்துள்ளது. அமைச்சரவை செயலகத்தின் பதிலை எதிர்த்து மத்திய தகவல் ஆணையத்திடம் பிரஷாந்த் முறையிட்டார். அம்பேத்கரின் ராஜினாமா கடிதம் நிச்சயம் பிரதமரின் செயலகத்தில் பராமரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
அரசியலமைப்புச்சட்ட விவகாரங்கள் பிரிவில் நீண்ட நேரம் தேடியும் அதற்கான ஆவணங்கள் கிடைக்கவில்லை என்று குடியரசுத் தலைவரின் செயலகம் இதற்கு பதில் அளித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ambedkar, Dr. B.R.Ambedkar, President Droupadi Murmu, Resignation, RTI