Home /News /national /

இந்தியாவில் முதல் முறையாக ஐ.வி.எஃப் முறையில் பிரசவித்த புங்கணூர் கன்று!

இந்தியாவில் முதல் முறையாக ஐ.வி.எஃப் முறையில் பிரசவித்த புங்கணூர் கன்று!

புங்கணூர் கன்று

புங்கணூர் கன்று

இந்தியாவில் சில முக்கிய மாடு இனங்கள் பெரிய அளவில் அழிந்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாகவும், அவற்றை மீட்கும் விதமாகவும் கால்நடை பராமரிப்பு துறையினர் IVF வழிமுறைகளை முயற்சித்துள்ளனர்.

விஞ்ஞான வளர்ச்சி கடந்த சில ஆண்டுகளாக பல பரிமாணங்களை பெற்றுள்ளது. விண்வெளி முதல் செயற்கை நுண்ணறிவு வரை பல துறைகளில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்நிலையில் அழிந்து வரும் சில உயிரினங்களை மீட்டெடுக்கும் வேலையிலும் அறிவியல் தொழில்நுட்பங்கள் இறங்கி உள்ளன. குறிப்பாக நமது நாட்டில், மாடுகள் போன்ற வீட்டு விலங்குகள் முதல் புலி போன்ற காட்டு விலங்கு இனங்கள் வரை அதன் வகைகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

இதை நிவர்த்தி செய்ய அவற்றை ஐ.வி.எஃப் முறையில் ஈன்றெடுக்கலாம் என்கிற அறிவியல் பயன்பாட்டை கால்நடை பராமரிப்பு துறை ஆய்வாளர்கள் கூறி வருவதுண்டு. அதிலும் இந்தியாவில் சில முக்கிய மாடு இனங்கள் பெரிய அளவில் அழிந்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாகவும், அவற்றை மீட்கும் விதமாகவும் கால்நடை பராமரிப்பு துறையினர் ஐ.வி.எஃப் வழிமுறைகளை முயற்சித்துள்ளனர்.

இந்தியாவில் மிகவும் பிரபலமான, பல நன்மைகளை கொண்ட புங்கணூர் வகை மாடுகள் எண்ணிக்கையில் 500-க்கும் குறைவாகவே உள்ளன. தற்போது ஐ.வி.எஃப் முறையை கொண்டு புங்கணூர் வகை மாட்டின் முதல் கன்றை கருத்தரிக்க செய்து, அதை நல்ல முறையில் பிரசவிக்கவும் செய்துள்ளனர். இந்த கன்று மகாராஷ்டிராவில் உள்ள அகமெத்நகரில் பிறந்துள்ளது.

ALSO READ |  1,000 போலீசாருக்கு கொரோனா - டெல்லி காவல்துறை அதிர்ச்சி தகவல்

இந்த புதிய முயற்சியை "புங்கணூர் செயல்திட்டம்" என்பதன் அடிப்படையில் செய்துள்ளனர். இதனால் நாட்டு மாடுகளின் பால் உற்பத்தியை பல மடங்கு உயர்த்த முடியும். நாட்டிற்கும் அதிக வருமானம் கிடைக்கும் என்று கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். மேலும், இது போன்ற நாட்டு மாடுகளின் பாலில் அதிக மருத்துவ குணங்கள் உள்ளன. எனவே பல நோய்களில் இருந்து இவை காக்கவல்லது. இதில் அதிக ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது.



கடந்த சில ஆண்டுகளாக இந்த செயல்திட்டம் பல்வேறு காரணங்களால் தள்ளி போய் கொண்டிருந்தது. நாட்டு மாடுகளை பாதுகாக்கவும், அவற்றின் பால் உற்பத்தியை பல மடங்கு அதிகரிக்கவும் இந்த திட்டத்தை தற்போது நிறைவேற்றி உள்ளதாக கால்நடை பராமரிப்பு துறையினர் குறிப்பிட்டுள்ளனர். இதன் முதல் முயற்சி வெற்றி அடைந்ததால், பண்ணி, தர்பகார், ஒங்களே போன்ற நாட்டு மாடுகளுக்கும் இந்த அடுத்ததாக முயற்சிக்க போவதாக தெரிவித்துள்ளனர்.

ALSO READ |  எம்.எல்.ஏ. ரோஜாவின் கோரிக்கையை ஏற்று சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் குஜராத்தில் ஐ.வி.எஃப் முறையில் இந்தியாவின் முதல் பண்ணி எருமை மாடு கன்றை பிரசவிக்க செய்தனர். இந்த இனமும் நமது நாட்டின் மிகவும் முக்கியமான மாடு வகையாகும். மேலும் இந்த எருமை மாட்டின் பால் சுரப்பை மரபணு முறையில் அதிகரிக்க போவதாகவும் தெரிவித்துள்ளனர். பொதுவாக இந்த வகை பண்ணி எருமை மாடுகள் அதிக அளவில் பால் சுரக்கும். இவற்றின் பால் உற்பத்தியும் நாட்டிற்கு பெரிதும் உதவும்.

இனி வரும் காலங்களில் நாட்டு மாடுகளின் இனத்தை ஐ.வி.எஃப் முறையில் பாதுகாத்து, அவற்றின் பால் உற்பத்தியை அதிகரிக்க செய்யப்போவதாக கால்நடை பராமரிப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: India, Maharashtra

அடுத்த செய்தி