• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • டெஸ்ட் டியூப் முறையில் பிறந்த எருமை கன்று: குஜராத் மருத்துவர்கள் சாதனை!

டெஸ்ட் டியூப் முறையில் பிறந்த எருமை கன்று: குஜராத் மருத்துவர்கள் சாதனை!

பன்னி இன எருமை

பன்னி இன எருமை

குஜராத் மாநிலத்தின் குச் பகுதியில் பன்னி வகை எருமை மாடுகள் அதிகளவில் காணப்படுகின்றன. ஒரு சராசரி பன்னி எருமை நாள் ஒன்றுக்கு 12 முதல் 18 லிட்டர் பால் கறக்கிறது. இவற்றின் நோய் எதிர்ப்பு திறனும் அதிகம்.

  • Share this:
    இந்தியாவில் முதன்முறையாக  குஜராத் மாநிலத்தில் டெஸ்ட் டியூப் முறையில் பன்னி (Banni) வகை எருமை கன்று ஈன்றெடுக்கப்பட்டுள்ளது.

    குஜராத் மாநிலத்தின் குச் பகுதியில் பன்னி வகை எருமை மாடுகள் அதிகளவில் காணப்படுகின்றன. இதன் காரணமாக வை குச்சி என்றும் அழைக்கப்படுகின்றன. ஒரு சராசரி பன்னி எருமை நாள் ஒன்றுக்கு 12 முதல் 18 லிட்டர் பால் கறக்கிறது.பன்னி எருமையை பொதுவான இனங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் வேறுபட்ட மரபணு அமைப்பைக் கொண்டுள்ளது, இது நீண்ட பாலூட்டும் காலங்களை அனுமதிக்கிறது, அதிக பால் உற்பத்தி திறன் மற்றும் நோயை எதிர்க்கும் திறன் கொண்டது.

    இத்தகைய பன்னி இன எருமையை செயற்கை முறையில் உருவாக்க மருத்துவர்கள் திட்டமிட்டனர். இதற்காக சோம்நாத்  மாவட்டம், தனெஜ் பகுதியைச் சேர்ந்த விவசாயி வினெய் எல்.வாலா என்பவரின் சுஷிலா வேளாண் பண்ணையில் உள்ள மூன்று பன்னி இன எருமைகளிடன் கரு முட்டையை அவர்கள் எடுத்தனர். இதனை டெஸ்ட் டியூப் முறையில் மற்றொரு எருமைக்கு செலுத்தப்பட்டது.



    தற்போது அந்த எருமை மாடு  செயற்கை கருவூட்டல் முறையிலான முதல் பன்னி இன எருமையை ஈன்றுள்ளது.  இதன் மூலம் இந்தியாவின் OPU - IVF பணி அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. இது தொடர்பாக மத்திய மின்வளம், கால்நடை துறை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நாட்டில் #BANNI என்ற எருமை இனத்தின் முதல் #IVF கன்று பிறந்த நற்செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. விவசாயி வினய் எல் வாலாவின் சுசீலா அக்ரோ பண்ணைகளில்6 பன்னி IVF கர்ப்பங்கள் ஏற்படுத்தப்பட்டது. அதில் பிறந்த முதல் #IVF_Banni_calf இது” என்று புகைப்படத்துடன் பதிவிடப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: உள்ளூர் பொருட்களை வாங்குகள்: மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: