இந்தியாவில் இதுவரை லித்தியம் கண்டுபிடிக்கப்படாமல் இருந்தது தற்போதுவரை இந்தியா லித்தியம் பேட்டரிகளை சீனா, ஹாங்காங் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகிறது . இந்நிலையில், இந்தியாவில் முதல் முறையாக லித்தியம் உலோகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சுரங்க அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்தியா புவியியல் ஆய்வு அமைப்பு, நாட்டில் உள்ள கனிம வளங்களை கண்டறிய பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ஜம்மு-காஷ்மீரில் நடத்தப்பட்ட ஆய்வில் லித்தியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் ரைசி மாவட்டத்தில் சலால்-ஹைமனா பகுதியில் லித்தியம் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒட்டுமொத்தமாக 5.9 மில்லியன் டன் லித்தியம் அந்த பகுதியில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மிகப்பெரிய அளவில் லித்தியம் உலோக தொகுப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் எதிர்காலத்தில் மின்சார வாகனங்களுக்கான மூலப்பொருளான லித்தியம் பேட்டரி இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.
பெருவெடிப்பில் இருந்து வெளிப்படும் ஒரே உலோகம், லித்தியம். மிக இலகுவான உலோகமான அது தண்ணீருடன் எரியக்கூடிய எதிர்வினையை உருவாக்குகிறது. மனித சதையை எரிக்கும் அளவுக்கு மிகவும் தீவிரமானது.
மட்பாண்டங்கள், கண்ணாடி, மருந்து கலவைகள், காற்றுச்சீரமைப்பிகள் மற்றும் அலுமினியம் உற்பத்தியில் லித்தியம் பயன்படுத்தப்படுகிறது. இது குறைந்த அடர்த்தியான உலோகமாக இருப்பதால், ஒரு கிலோவிற்கு மேல் ஆற்றல் சேமிப்பு திறன் கொண்டது உதாரணமாக, ஒரு டெஸ்லா கார் 600 கிலோ லித்தியம் அயன் பேட்டரியில் இயங்க முடியும். அதே, ஈய-அமில பேட்டரிகளை பயன்படுத்தினால் 4000 கிலோ தேவைப்படும்.
உலகின் 50% லித்தியம் ஆஸ்திரேலியாவில் உள்ளது. தென் அமெரிக்க நாடுகளும் அதிக லித்திய வளம் கொண்டவை. குறிப்பாக சிலி, அர்ஜென்டினா மற்றும் பொலிவியா ஆகியவற்றில் அதிக லித்தியம் உள்ளதால், அவை 'லித்தியம் முக்கோணம் என்று அழைக்கப்படுகின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jammu and Kashmir