பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா புதிய கொள்கைகளின் மூலம் போராடுகிறது - பிரதமர் மோடி

பிரதமர் மோடி

கடமைக்கும் உரிமைக்குமான நெருங்கிய தொடர்பை மகாத்மா காந்தி கண்டதாகவும், கடமைகளை செய்தால் உரிமைகள் தானாக பாதுகாக்கப்படும் என்று காந்தி உணர்ந்திருந்தார் என்றும் மோடி மேற்கோள் காட்டினார்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா புதிய கொள்கைகளின் மூலம் போராடி வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

  80-வது அகில இந்திய தலைமை அதிகாரிகள் கருத்தரங்கில் நிறைவு பகுதியில் காணொலியில் பங்கேற்று பிரதமர் மோடி பேசினார். அப்போது பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடி வரும் பாதுகாப்புப்படையினருக்கு தலைவணங்குவதாக கூறினார்.

  2008-ஆம் ஆண்டு இதே நாளில் மும்பையை பாகிஸ்தான் தாக்கியதாக கூறிய மோடி, வெளிநாட்டினர், போலீசார் தாக்குதலில் உயிரிழந்ததாகவும், அந்த காயங்களை இந்தியா மறக்காது என்றும் நினைவுகூர்ந்தார்.

  Also read... Cyclone Nivar | புயலை தாங்கும் அளவுக்கு சென்னை மாறினாலும், பாராட்டும் அளவுக்கு இல்லை - கமல்ஹாசன்..  இந்திய அரசியலமைப்புச்சட்டத்தில் பல அம்சங்கள் இருந்தாலும் அவற்றில் கடமை சிறப்பு வாய்ந்தது என்றும் அவர் கூறினார். கடமைக்கும் உரிமைக்குமான நெருங்கிய தொடர்பை மகாத்மா காந்தி கண்டதாகவும், கடமைகளை செய்தால் உரிமைகள் தானாக பாதுகாக்கப்படும் என்று காந்தி உணர்ந்திருந்தார் என்றும் மோடி மேற்கோள் காட்டினார்.
  Published by:Vinothini Aandisamy
  First published: