• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • நிலக்கரிக்கு கடும் தட்டுப்பாடு: இருளில் மூழ்கும் இந்தியா!

நிலக்கரிக்கு கடும் தட்டுப்பாடு: இருளில் மூழ்கும் இந்தியா!

மின் பாதிப்பு

மின் பாதிப்பு

 நிலக்கரி எடுக்கப்படும் சுரங்கங்கள் அமைந்துள்ள பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக நிலகரி உற்பத்தி மற்றும் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    தலைநகர் டெல்லி ஒருநாள் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான நிலக்கரியே தங்கள் கையிருப்பில் உள்ளதாக தெரிவித்துள்ளது. இதேபோல், பல்வேறு மாநிலங்களிலும் நிலக்கரி கையிருப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. இதனால், மின் உற்பத்தி மற்றும் மின் விநியோகம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    இந்தியா தனது மின்சார தேவைக்கு நிலக்கரியையே பெரிதும் சார்ந்துள்ளது. இந்தியாவின் 70 சதவீத மின் தேவை அனல் மின் நிலையங்கள் மூலம் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.  நிலக்கரி எடுக்கப்படும் சுரங்கங்கள் அமைந்துள்ள பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக நிலகரி உற்பத்தி மற்றும் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    சர்வதேச அளவில் நிலகரியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் அவற்றின் இறக்குமதியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள கடும் தட்டுப்பாடு காரணமாக பெரும்பாலான மாநிலங்களின் நிலக்கரி கையிருப்பு குறைந்துள்ளது.

    டெல்லியில் உள்ள அனல் மின் நிலையங்களில் ஒருநாளைக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்யப்படும் அளவே நிலக்கரி கையிருப்பில் உள்ளதாக அம்மாநில மின்துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்துள்ளார். வட மாநிலங்களில் பலவற்றில் தற்போது  சில மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: ஆன்லைன் கிராமங்கள், 2 லட்சம் கி.மீ. தேசிய நெடுஞ்சாலை: கதி சக்தி திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் என்ன?


    ராஜஸ்தான் மாநிலத்தின் 10 முக்கிய நகரங்களில் தினமும் ஒருமணி நேரம் மின்விநியோகம் நிறுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.  பஞ்சாபில் நாள் ஒன்றுக்கு 3 முதல் 4 மணி நேரம் மின் வெட்டு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.  நிலக்கரி உற்பத்தி செய்யப்படும் ஆந்திராவிலும் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கடிதம் எழுதியிருந்தார்.

    தமிழகத்திலும் நிலக்கரி தட்டுப்பாடு உள்ளது.  இதனிடையே, இன்னும் 3, 4 நாட்களில் நிலைமை சீர் அடையும் என்று மத்திய நிலக்கரி அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: