• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • சீனாவை போல் இந்தியாவிலும் நிலக்கரி தட்டுப்பாடு: மின் உற்பத்தி பாதிக்கப்பட வாய்ப்பு!

சீனாவை போல் இந்தியாவிலும் நிலக்கரி தட்டுப்பாடு: மின் உற்பத்தி பாதிக்கப்பட வாய்ப்பு!

நிலக்கரி

நிலக்கரி

நிலக்கரி எடுக்கப்படும் சுரங்கங்கள் அமைந்துள்ள பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக நிலகரி உற்பத்தி மற்றும் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.  கொரோனா காரணமாக நிலகரி விநியோகம் பாதிக்கப்பட்ட நிலையில்,  கொரோனா காரணமாக அதிகரித்த மின் தேவை நிலைமையை மேலும் மோசமாக்கியது.

  • Share this:
இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தி குறைவு காரணமாக நிலக்கரிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது சரியாக 6 மாதங்கள் வரை ஆகலாம் என்றும் மத்திய அமைச்சர் கூறியுள்ளார். இதனால் வருங்காலங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு மின் தட்டுப்பாடு அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்தியா தனது மின்சார தேவைக்கு நிலக்கரியையே பெரிதும் சார்ந்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டில்  1125.2 டெராவாட் நேர மின்சாரம் நிலக்கரி மூலம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.  மொத்த மின்சார உற்பத்தியில் இது 80 சதவீதத்திற்கும் மேல் ஆகும்.தற்போது நிலக்கிரி உற்பத்தியைவிட இந்தியாவின் மின் தேவை அதிகமாக உள்ளது.  இதனால் நிலகரிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அக்டோபர் 4ம் தேதி  கணக்குப்படி இந்தியாவில் நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கும் 135 ஆலைகளில் பாதிக்கும் மேலானவற்றில் 3 நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவின் நிலக்கரி தேவை அதன் உள்நாட்டு உற்பத்தி மூலமே பெருமளவில் பூர்த்தி செய்யப்படுகிறது. உலகில் மிகப்பெரிய நிலக்கரி உற்பத்தி நிலையமான கோல் இந்தியா லிமிடெட் (Coal India Limited) , இந்தியாவின் நிலக்கரி தேவையில்  84 சதவீதத்தை உற்பத்தி செய்கிறது. 130 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்ட இந்தியாவின் மின் தேவை அதிகம் என்பதால் பிறநாடுகளில் இருந்தும் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: வீட்டு பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மீண்டும் உயர்வு!


நிலக்கரி பற்றாக்குறை ஏன்

சர்வதேச அளவில் நிலக்கரி உற்பத்தியில் சீனா முதலிடத்தில் உள்ளது அந்நாடு 2020ம் ஆண்டில் 80.91 எக்ஸாஜூல் நிலக்கரியை உற்பத்தி செய்துள்ளது. அடுத்த இடத்தில் 13.88 எக்ஸாஜூலுடன் இந்தோனேசியாவும் அதற்கு அடுத்த இடத்தில் 12.68 எக்ஸாஜூலுடன் இந்தியாவும் உள்ளன. நிலக்கரி பயன்பாட்டில் சீனா 82.27 எக்ஸாஜூலுடன் முதல் இடத்திலும் இந்தியா 17.54 எக்ஸாஜூலுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன.

கோல் இந்தியா லிமிடெட் நிறுவனம்  தொடர்ந்து தனது வருடாந்திர இலக்குகளை எட்ட முடியாமல் தோல்வி அடைந்து வருகிறது.  நிலக்கரி எடுக்கப்படும் சுரங்கங்கள் அமைந்துள்ள பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக நிலகரி உற்பத்தி மற்றும் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.  கொரோனா காரணமாக நிலகரி விநியோகம் பாதிக்கப்பட்ட நிலையில்,  கொரோனா காரணமாக அதிகரித்த மின் தேவை நிலைமையை மேலும் மோசமாக்கியது.



மின் தட்டுப்பாடு ஏற்படும்

நிலக்கிரியின் விலை கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து  தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால்,நிலகரியை அதிகளவில் இறக்குமதி செய்வதிலும் இந்தியாவுக்கு பொருளாதார நெருக்கடி நிலவுகிறது.

மேலும் படிக்க: ஹாரன்களுக்கு இந்திய இசைக் கருவி சத்தங்கள் மட்டுமே பயன்படுத்த சட்டம்- மத்திய அமைச்சர் நிதின் கட்கரி


நிலக்கிரி கையிருப்பு குறைந்துகொண்டே வருவதால் இந்தியாவில் வருங்காலத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு மின் தட்டுப்பாடு ஏற்படக்கூடும். இந்த நிலக்கரி தட்டுப்பாடு அடுத்த 5 முதல் 6 மாதங்களுக்கு நிலவக்கூடும் என்று மத்திய மின் துறை அமைச்சர்ராஜ் குமார் சிங் கூறியுள்ளார்.

சீனாவிலும் இதே நிலைதான்

உலகின் மிகப்பெரிய நிலக்கரி உற்பத்தியாளரான சீனாவிலும் தற்போது நிலக்கரி தட்டுப்பாடு நிலவுகிறது. அந்நாட்டு தொழிற்சாலைகள் பெரிதும் நிலக்கரி சார்ந்த மின்சாரத்தை பயன்படுத்தி வருகின்றன. தற்போது நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின் விநியோகம் குறைந்தது. இதனால் சீன பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளிலும் மின்சார தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியுள்ளது. தற்போது இதுபோன்ற நிலைக்கு இந்தியாவுக்கு சென்றுகொண்டிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesh M
First published: