ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு முடிவு..!

உள்நாட்டில் தேவை அதிகரித்து வருவதால் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடைவிதித்து இருந்தது.

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு முடிவு..!
மாதிரி படம்
  • Share this:
கொரோனா தொற்றால் அதிகம் பாதித்த நாடுகளுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் ஏற்றுமதி செய்யப்படும் என்ற மத்திய அரசு அறிவித்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் இதுவரை 13 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ள நிலையில் 75,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸிற்கு இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் வழங்க இந்திய மருத்துவ கவுன்சில் ஒப்புதல் வழங்கியது. இதனால் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் உள்ள மாத்திரைகள் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க அதனை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடைவிதித்து இருந்தது.


கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க அரசு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை வழங்குமாறு கடந்த வாரம் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் இதுவரை மருந்துகளை அனுப்பாமல் இருந்ததால் அதிபர் டிரம்ப் இந்தியாவிற்கு பதிலடி கொடுப்போம் என்று பகிரங்க மிரட்டல் விடுத்தார்.

உள்நாட்டில் தேவை அதிகரித்து வருவதால் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடைவிதித்து இருந்தது. இந்தியாவில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் போதுமான அளவு இருப்பில் உள்ளதால் கொரோனா அதிகம் பாதித்த பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.









சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: April 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading