பாக். ராணுவத்தை அல்ல... தீவிரவாதிகளை குறிவைத்தே தாக்குதல் - சுஷ்மா ஸ்வராஜ்

இரு நாடுகள் இடையே மேலும் பதற்றத்தை அதிகரிக்க இந்தியா விரும்பவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

பாக். ராணுவத்தை அல்ல... தீவிரவாதிகளை குறிவைத்தே தாக்குதல் - சுஷ்மா ஸ்வராஜ்
சுஷ்மா ஸ்வராஜ்,
  • News18
  • Last Updated: February 27, 2019, 4:28 PM IST
  • Share this:
இந்தியா - பாகிஸ்தான் இடையே மேலும் பதற்றத்தை அதிகரிக்க இந்தியா விரும்பவில்லை என வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

இந்தியா - ரஷ்யா - சீனா வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கூட்டம் சீனாவில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளச் சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், சீன வெளியுறவு அமைச்சரை சந்தித்துப் பேசினார்.

Also see... இந்திய எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்


இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சுஷ்மா, புல்வாமா தாக்குதல் குறித்தும், இந்திய ராணுவத்தின் பதில் தாக்குதல் குறித்தும் விளக்கம் அளித்தார்.

புல்வாமா தாக்குதலில் 40 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்ததையடுத்து, மேலும் பல இடங்களில் ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக நம்பகத்தகுந்த தகவல்கள் வந்ததாகவும், எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய பதிலடி தாக்குதல் நடத்தியதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், பாகிஸ்தானின் ராணுவ முகாம்களை குறிவைக்கவில்லை என தெரிவித்த சுஷ்மா ஸ்வராஜ், தீவிரவாத அமைப்பின் கட்டமைப்புகளை குறி வைத்தே பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறினார்.இரு நாடுகள் இடையே மேலும் பதற்றத்தை அதிகரிக்க இந்தியா விரும்பவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

Live Updates: இந்தியா -  பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் - உடனுக்குடன் அப்டேட்களை தெரிந்து கொள்ள க்ளிக் செய்க

First published: February 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading