Home /News /national /

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மங்கோலியா பயணம் - குதிரையைப் பரிசு அளித்த அதிபர்!

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மங்கோலியா பயணம் - குதிரையைப் பரிசு அளித்த அதிபர்!

பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்க்கு குதிரை பரிசு

பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்க்கு குதிரை பரிசு

இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்-விற்கு மங்கோலியா அதிபர் உக்னாகின் குரேல்சுக் வெள்ளைக் குதிரையைப் பரிசளித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • international, IndiaMongolia Mongolia
    இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மங்கோலியாவிற்கு சுற்று பயணம் சென்றுள்ளார். இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் மங்கோலியா செல்வது இதுவே முதல் முறையாகும். இந்த சந்திப்பில் மங்கோலியா அதிபர் உக்னாகின் குரேல்சுக், அமைச்சருக்கு வெள்ளை நிற குதிரையைப் பரிசளித்துள்ளார். அந்த குதிரைக்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் "தேஜஸ்" என்று பெயரிட்டுள்ளார்.

    பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 5 நாட்கள் மங்கோலியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் செவ்வாய் அன்று மங்கோலியா அதிபர் உக்னாகின் குரேல்சுக் - னை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கும் உள்ள பாதுகாப்பு ஒத்துழைப்புக்களைப் பற்றிக் கலந்துரையாடப்பட்டது. மேலும் இருதரப்பு உறவை வலுப்படுத்தவும் இந்த சந்திப்பு மேற்கொள்ளப்பட்டது.



    7 வருடம் முன்னாள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மங்கோலியா சென்ற போது இதே மாதிரியான ஒரு பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. தற்போது இந்த பரிசை பற்றிப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவருடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் இந்த அற்புதமான அழகிற்கு நான் "தேஜஸ்" என்று பெயரிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார். மேலும் மங்கோலியா அதிபர் உக்னாகின் குரேல்சுக்-விற்கும் மங்கோலியாவிற்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

    Also Read : கம்பீரமாகக் காட்சியளிக்கும் புதுப்பிக்கப்பட்ட சென்ட்ரல் விஸ்டா - பிரதமர் மோடி நாளை திறப்பு!

    2015ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி மங்கோலியா சென்றபோது அவருக்கும் இதே போல் ஒரு பழுப்பு நிறத்தில் பந்தயக் குதிரை அப்போதைய பிரதமர் சிமிட் சைகான்பிலெக் பரிசளித்தார்.
    Published by:Janvi
    First published:

    Tags: India, Rajnath singh

    அடுத்த செய்தி