• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் சீனாவை முந்திய இந்தியா - மோடி பிறந்தநாளன்று சாதனை

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் சீனாவை முந்திய இந்தியா - மோடி பிறந்தநாளன்று சாதனை

தடுப்பூசி

தடுப்பூசி

ஒரே நாளில் அதிக கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் சீனாவின் சாதனையை இந்தியா முறியடித்துள்ளது.

  • Share this:
    உலகிலேயே ஒரே நாளில் இரண்டரை கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி செலுத்தி சீனாவின் சாதனையை இந்தியா முறியடித்துள்ளது.

    கடந்த ஜூன் மாதத்தில் சீனாவில் ஒரே நாளில் 2.47 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியதே உலக சாதனையாக இருந்தது. இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி 1.41 கோடி பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டதே அதிகபட்சமாக இருந்தது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை ஒட்டி செப்டம்பர் 17ம் தேதி நாடு முழுவதும் இரண்டரை கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

    இதில் நாட்டிலேயே அதிகபட்சமாக கர்நாடகத்தில் 26.90 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

    பீகாரில் மட்டும் ஒரேநாளில் 26.60 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். 24.80 லட்சம் பேருடன் 3வது இடத்தில் உத்தரபிரதேசம் உள்ளது.

    மத்திய பிரேதசத்தில் 23.70 லட்சம் பேரும் குஜராத்தில் 20.40 லட்சம் பேரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை, ஐரோப்பாவில் மொத்த தடுப்பூசி செலுத்திக்கொண்டோரை விட அதிகம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    இந்தியாவில் இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொண்டோரில் 19.72 கோடி பேர் மட்டுமே 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். 59.52 கோடி பேர் முதல் டோஸ் தடுப்பூசி மட்டுமே செலுத்திக்கொண்டுள்ளனர்.

    அக்டோபர் 7ம் தேதிக்கு முன் இந்தியாவில் 100 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது என்ற மைல்கல் எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உலகளவில் பெரிய நாடுகளில் ஒரு டோசாவது தடுப்பூசி செலுத்திக்கொண்டோரின் சராசரி விகிதம் 43 விழுக்காடாக உள்ள நிலையில், இந்தியாவில் இந்த விகிதம் 42 விழுக்காடாக உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    உலக சாதனை நிகழ்ந்த செப்டம்பர் 17ம் தேதி மட்டும் நாட்டில் தடுப்பூசி செலுத்திக்கொண்டதில் 97 விழுக்காடு மக்கள் அரசு மருத்துவமனைகளை நாடியுள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: