Home /News /national /

அரை கம்பத்தில் தேசிய கொடி.. அரபு அமீரக அதிபர் ஷேக் காலிபா மறைவுக்கு இந்தியா துக்கம் அனுசரிப்பு

அரை கம்பத்தில் தேசிய கொடி.. அரபு அமீரக அதிபர் ஷேக் காலிபா மறைவுக்கு இந்தியா துக்கம் அனுசரிப்பு

ஐக்கிய அரபு அமீரக அதிபர் மறைவுக்கு இந்திய அரசு ஒரு நாள் துக்கம்

ஐக்கிய அரபு அமீரக அதிபர் மறைவுக்கு இந்திய அரசு ஒரு நாள் துக்கம்

sheikh khalifa: அதிபர் ஷேக் காலிபாவின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், பிரதமர் மோடி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் காலிபா பின் சயித் அல் நஹ்யான் நேற்று காலமான நிலையில், அவரது மறைவுக்கு ஒரு நாள் அரசு துக்கம் அறிவித்து இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இன்று மே 14ஆம் தேதி நாள் முழுவதும் அரசு அலுவலகங்களில் தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கும். அதிபர் ஷேக் காலிபாவின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், பிரதமர் மோடி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தின் இரண்டாவது அதிபராக ஷேக் கலிபா பொறுப்பேற்றுக் கொண்டார். அபுதாபியின் மிகப் பெரிய பணக்காரரான இவரது தந்தை இவருக்கு முன்னர் முதல் அதிபராக பொறுப்பு வகித்தார்.  2014ஆம் ஆண்டில் ஷேக் காலிபாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதன் பின்னர், இவர் அரிதாகவே பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.

    இந்நிலையில், 73 வயதான ஷேக் காலிபா சிகிச்சை பலனின்றி காலமானார். இவரின் மறைவுக்கு அந்நாட்டு அரசு 40 நாள் துக்கம் அறிவித்து உத்தரவிட்டுள்ளது. அத்துடன் அடுத்த மூன்று நாட்களுக்கு அங்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முறைப்படி கல்வி கற்காத ஷேக் கலிபா,தனது திறன் மிக்க செயல்பாடு காரணமாக துபாயை சுற்றுலாத் துறையில் சிறந்து விளங்க செய்தார். அத்துடன், அபுதாபியின் எண்ணெய் வளத்தையும் மிக சிறப்பாக பயன்படுத்தினார்.

    இதையும் படிங்க: நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தாவுக்கு கோவிட் பாதிப்பு உறுதி

    2009ஆம் ஆண்டு பெரும் கடனில் சிக்கித் தவித்த துபாய்க்கு சிறந்த பொருளாதார வளர்ச்சியை உருவாக்கி தந்தவர் மறைந்த அதிபர் ஷேக் கலிபா. இவரது சகோதரரான அபுதாபியின் இளவரசர் முகமது பின் சயித் ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசர் போல பிரதான அதிகார மையமாக செயல்பட்டு வருகிறார்.

    ர் ஷேக் காலிபா பின் சயித் அல் நஹ்யான் நேற்று காலமான நிலையில், அவரது மறைவுக்கு ஒரு நாள் அரசு துக்கம் அறிவித்து இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இன்று மே 14ஆம் தேதி நாள் முழுவதும் அரசு அலுவலகங்களில் தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கும் என்றும் அரசு சார்பில் எந்த பொழுதுபோக்கு நிகழ்வும் நடைபெறாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: India, UAE

    அடுத்த செய்தி