Home /News /national /

மீண்டும் 19 ஆயிரத்தை நெருங்கிய தினசரி கொரோனா பாதிப்பு - சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1.25 லட்சத்தை தாண்டியது

மீண்டும் 19 ஆயிரத்தை நெருங்கிய தினசரி கொரோனா பாதிப்பு - சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1.25 லட்சத்தை தாண்டியது

மீண்டும் அதிகரிக்கும் கோவிட் பாதிப்பு

மீண்டும் அதிகரிக்கும் கோவிட் பாதிப்பு

கொரோனா காரணமாக ஒரே நாளில் 43 உயிரிழப்புகள் பதிவான நிலையில், நாட்டின் மொத்த உயிரிழப்பு 5,25,386ஆக அதிகரித்துள்ளது.

    இந்தியாவின் தினசரி கோவிட்-19 பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து காணப்படும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 19 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின் படி, நாட்டின் தினசரி கோவிட் பாதிப்பு எண்ணிக்கை 18,840 ஆக பதிவாகியுள்ளது.

    இதன் மூலம் நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 36 லட்சத்து 4 ஆயிரத்து 394ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கோவிட் பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 28ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,693ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 43 உயிரிழப்புகள் பதிவான நிலையில், நாட்டின் மொத்த உயிரிழப்பு 5,25,386ஆக அதிகரித்துள்ளது.

    அதேபோல் பாதிப்பு விகிதத்தை குறிக்கும் தினசரி டெஸ்ட் பாசிடிவிட்டி விகிதம் நேற்று 4.14 சதவீதமாக உள்ளது. நேற்று ஒரே நாளில் 4 லட்சத்து 54 ஆயிரத்து 778 பேருக்கு கோவிட் பரிசோதனை மேற்கொண்டுள்ளது. மாநிலங்களைப் பொறுத்தவரை தமிழ்நாடு, கேரளா,மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.

    தமிழ்நாட்டில், 2,413 புதிய கோவிட் பாதிப்புகள் பதிவான நிலையில், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 18,687ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் புதிதாக 4,172 பாதிப்புகள் பதிவான நிலையில், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 28,891ஆக அதிகரித்துள்ளது. இந்த இரு மாநிலங்களைப் போலவே டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கோவிட் பாதிப்பு எண்ணிக்கை அதிகம் காணப்படுகிறது.

    இதையும் படிங்க: அடுத்த ஐந்தாண்டுகளில் பெட்ரோல் தேவை இருக்காது - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

    நாட்டில் சிறார்கள் மற்றும் வயது வந்தோருக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டப்பணிகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த ஒரே நாளில் 12,26,795 பேருக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை ஒட்டுமொத்தமாக 198.65 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் நாட்டில் செலுத்தப்பட்டுள்ளன. தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில் பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்கான கால இடைவெளியை 9 மாதத்தில் இருந்து 6 மாதமாக சுகாதாரத்துறை குறைத்துள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Corona, Covid-19

    அடுத்த செய்தி