Home /News /national /

இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்திற்கும் கீழாக குறைந்தது... 24 மணிநேரத்தில் 180 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்திற்கும் கீழாக குறைந்தது... 24 மணிநேரத்தில் 180 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 14 ஆயிரத்து 23 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 16,864 பேர் பாதிப்பிலிருந்து குணம் அடைந்துள்ளார்கள்.

    இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்திற்கும் கீழாக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 180 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

    கொரோனா பாதிப்பின் 3வது அலையில் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் தற்போது உள்ளன. கடந்த 2 வாரங்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இறங்கு முகத்தை சந்தித்து வருகிறது. இதையொட்டி, பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

    இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 6,915 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 180 பேர் உயிரிழந்துள்ளார்கள். தற்போது 92,472 பேர் கொரோனா பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதையும் படிங்க - என் மரணத்திற்காக அரசியல் எதிரிகள் பிரார்த்தனை.. வாரணாசியில் பிரதமர் மோடி உருக்கம்

    இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 14 ஆயிரத்து 23 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 16,864 பேர் பாதிப்பிலிருந்து குணம் அடைந்துள்ளார்கள்.

    கொரோனா தொற்றிலிருந்து குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 23 லட்சத்து 24 ஆயிரத்து 550 ஆக உள்ளது. கொரோனாவிலிருந்து மீள்வோர் சதவீதம் 98.59 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து 2வது நாளாக 10 ஆயிரத்திற்கும் குறைவாக இந்தியாவில் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.

    இதையும் படிங்க - மேற்கு வங்கத்தில் உள்ளாட்சித் தேர்தலில் மோசடி நடந்ததாக பா.ஜ.க போராட்டம்- பல்வேறு பகுதிகளில் பதற்றம்
     தமிழ்நாட்டை பொருத்தவரை நேற்று 209 ஆண்கள், 157 பெண்கள் என மொத்தம் 366 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 96 பேரும், கோவையில் 54 பேரும், செங்கல்பட்டில் 40 பேரும், நீலகிரியில் 18 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    குறைந்தபட்சமாக பெரம்பலூர், மயிலாடுதுறை, தென்காசி, திருவாரூர், நெல்லை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Musthak
    First published:

    Tags: Covid-19

    அடுத்த செய்தி