ஹோம் /நியூஸ் /இந்தியா /

இந்தியாவில் ஒரே நாளில் 2 மடங்காக உயர்ந்த கொரோனா... மீண்டும் 2,000ஐ தாண்டியது!

இந்தியாவில் ஒரே நாளில் 2 மடங்காக உயர்ந்த கொரோனா... மீண்டும் 2,000ஐ தாண்டியது!

தினசரி கொரோனா பாதிப்பு

தினசரி கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,000க்கும் அதிகமான கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், தினசரி பாதிப்பு ஒரே நாளில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Delhi, India

  இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 2,000க்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. இதன் மூலம் நாட்டில் தினசரி பாதிப்பு ஒரே நாளில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த வாரங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்துக்கும் குறைவாக பதிவாகி வந்த நிலையில், கடந்த சில நாள்களாக பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் கணிசமாக உயரத்தொடங்கியது.

  இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 ஆயிரத்து 208 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 கோடி 46 லட்சத்து 49 ஆயிரத்து 088 ஆக அதிகரித்துள்ளது.

  அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,28,999 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு நாளில் கொரோனா பாதிப்பில் இருந்து 3,619 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

  இதையும் படிங்க: இன்டிகோ விமான எஞ்சினில் பற்றிக்கொண்ட தீ... பீதியடைந்த பயணிகள்

  மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 19 ஆயிரத்து 398 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் 219 கோடியே 75 லட்சத்து 36 ஆயிரத்து 041 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் இதுவரை போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Corona, Covid-19